சிவகங்கை மாவட்டம், காரைக் குடியில் மக்கள் நலக்கூட்டணி யின் மதிமுக வேட்பாளர் புலவர் செவந்தியப்பனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று பேசியதாவது:
தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்று நினைப்பவர்கள் மக்கள் நலக்கூட்டணியை விரும் புகின்றனர். அவர்களை திசை திருப்புவதற்காகவும், மக்களின் மனத்தை மாற்றும் வகையிலும் பத்திரிகைகள், டிவிக்களில் பொய்யான கருத்துக் கணிப்பு பிரச்சாரத்தை திமுக மேற் கொண்டு வருகிறது.
மத்திய அரசு அறிக்கை யின்படி, தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்பு கின்றனர். இதில் தேமுதிக, மக்கள் நலக்கூட்டணி, தமாகா கூட்டணிக்கு 35 சதவீத ஆதரவு உள்ளது என அந்த அறிக்கையில் உள்ளது. ஆனால், அதை இங்குள்ள சில பத்திரிகைகள் இருட்டடிப்பு செய்கின்றன.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழல் இருக்காது. ஆட்சியை நெறிப்படுத்தும் குழு, அரசி யல்வாதிகள் இல்லாத பொதுத் தணிக்கை குழு அமைத்து சிறப்பான ஆட்சி அமைப் போம். அதிமுகவும், திமுகவும் பணத்தை நம்பியே தேர்தலில் ஈடுபடுகின்றனர். அதிமுக தொகுதிக்கு ரூ.10 கோடியும், திமுக தொகுதிக்கு ரூ.8 கோடி யும் செலவழிக்கத் தயாராகி விட்டனர்.
குருவி சேர்ப்பதுபோல இந்தக் கூட்டணியை அமைத்துள்ளோம். மாற்றத்தை விரும்புவோர் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த வேண்டும். இந்த வாய்ப்பை பயன்படுத்த தவறினால் வரும் காலத்தில் யாரும் தனித்து கூட்டணி வைக்க முன்வர மாட்டார்கள். திரும்பவும் அந்த இரண்டு ஊழல் கட்சிகளோடு கூட்டணி வைக்கும் நிலைதான் வரும். இரண்டு ஊழல் கட்சிகளிடமிருந்து தமிழகத்தை காப்பாற்ற முடியாது. இளை ஞர்கள் மனம் வெறுத்து தவறான பாதைக்கு செல்லும் வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.