தமிழகம்

தமிழகத்தில் பணநாயகம் வெல்லக் கூடாது: சீமான்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் பணநாயகம் வெல்லக் கூடாது. அதை சொல்வதே ஒவ்வொரு குடிமகனுக்கும் அவமானம் என்று சீமான் கூறியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை சாலிகிராமத்தில் வாக்களித்தார்.

வாக்களித்த பின் சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் நம்பிக்கை ஏற்படுத்துவதாக இல்லை. அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

19-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதாக இருந்தால் 18-ம் தேதி அந்த இரு தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டும்.

இல்லையென்றால் வாக்கு எண்ணிக்கையை தள்ளிவைக்க வேண்டும். அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் தேர்தல் நடந்த பிறகே வாக்கு எண்ணிக்கை நடைபெற வேண்டும்.

அப்படி செய்யாவிட்டால் 232 தொகுதிகளில் எந்த கட்சி ஜெயிக்கிறதோ, அந்தக் கட்சிக்கு சாதகமான வாக்குப் பதிவு இரு தொகுதிகளில் வந்துவிடும். அது முறையான ஜனநாயகமாகவும், முறையான தேர்தலாகவும் இருக்காது.

தமிழகத்தில் பணநாயகம் வெல்லக் கூடாது. அதை சொல்வதே ஒவ்வொரு குடிமகனுக்கும் அவமானம்'' என்று சீமான் கூறினார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT