தி.நகர் தொகுதியில் முதல்முறை யாக போட்டியிடும் பாஜக வேட் பாளர் ஹெச்.ராஜா, “நான் ஜெயித் தால் சத்தியமாக இதையெல்லாம் செய்யமாட்டேன்” என்று பட்டியலிட்டு வித்தியாசமாக பிரச்சாரம் செய்து வருகிறார்.
தி.நகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் அக்கட் சியின் தேசிய செயலாளரான ஹெச்.ராஜா வித்தியாசமான முறையில் பிரச்சாரம் செய்து வருகிறார்.
தி.நகர் பனகல் பார்க், ரங்கநாதன் தெரு வர்த்தக சங்க நிர்வாகிகள் மற்றும் பெண் வாக்காளர்களிடம் வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்த அவர், “தி.நகரில் நான் ஜெயித்தால், சத்தியமாக 5 பைசா லஞ்சம் வாங்க மாட்டேன். வர்த்தக நிறுவனங்களிடம் மாத மாமூல் கேட்க மாட்டேன். குறிப்பாக கட்டப்பஞ்சாயத்து நடத்த மாட்டேன். தொகுதி முழுக்க மதுக்கடைகளை திறக்க விடமாட்டேன்” என்று வித்தியாசமாக பேசி வாக்கு சேகரித்தார்.
பிரச்சாரத்துக்கு நடுவில் ‘தி இந்து’வுக்கு பேட்டியளித்த அவர், “நான் இந்திய ரயில்வே பயணிகள் நல வாரிய சேர்மனாகவும் பதவி வகிக்கிறேன். நான் வெற்றி பெற்றால் மாம்பலத்தில் எல்லா எக்ஸ்பிரஸ் ரயில்களையும் நிற்க வைப்பேன். மாம்பலம், கோடம் பாக்கம் ரயில் நிலையங்களில் முதியவர்களின் வசதிக்காக எஸ்க லேட்டர் அமைத்துக் கொடுப் பேன். நெரிசல் மிகுந்த ரங்க நாதன் தெருவில் பயணிகள் நடை மேம்பாலம் அமைப்பேன். வர்த் தக நிறுவனங்களின் வசதிக்காக ரங்கநாதன் தெரு, வடபழனி, உஸ் மான் ரோடு பகுதியில் மல்டி லெவல் பார்க்கிங் அமைத்துக் கொடுப்பேன்.
கோடம்பாக்கத்தில் உள்ள சினிமா கலைஞர்களின் நலனுக்கு பாடுபடுவேன். எனக்கு ஆதரவு கேட்டு பிரதமர் மோடியே நேரில் வந்து பிரச்சாரம் செய் துள்ளார். நடிகரும், எம்பியுமான சுரேஷ் கோபி பிரச்சாரம் செய் துள்ளார். நான் ஜெயிப்பது உறுதியாகி விட்டதால் எதிரணியினர் மிரண்டுபோய் ரவுடித்தனத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அது குறித்து தேர்தல் அதிகாரிகளிடம் புகார் செய்துள்ளேன்’’ என்றார்.