தமிழகம்

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணியாவிடில் ரூ.500 அபராதம்: சென்னை மாநகராட்சி முடிவு

கண்ணன் ஜீவானந்தம்

சென்னை: பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணியாவிடில் ரூ.500 அபராதம் விதிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சென்னையில் தினசரி கரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டி பதிவாகிவருகிறது.கடந்த 2 வாரங்களாக சென்னையில் கரோனா வைரஸ் தொற்று அதிக அளவில் பரவி வருகிறது.

இந்நிலையில், சென்னையில் பொதுமக்கள் அனைவரும் கட்டயாம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று நேற்று சென்னை மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் கரோனா தொற்று கட்டுப்பாடுகள் தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் தலைமையில் நேற்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தால் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

மேலும், முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி முதல் கட்டமாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணியாவிடில் ரூ.500 அபாராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT