புதுச்சேரி தேமுதிக மாநில பொறுப்பாளர் செல்வராஜ் தனது பதவியை ராஜினாமா செய்து கட்சித் தலைமைக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவித்தார்.
விலகல் தொடர்பாக அவர் கூறும்போது, “புதுச்சேரி மாநில தேமுதிக நிர்வாகிகளை தலைமை ஒரு பொருட்டாகவே மதிப்ப தில்லை. தமிழகத்துக்கு மட்டுமே கட்சித் தலைமை மிகுந்த முக்கியத்துவம் தருகிறது. இத னால் கட்சியிலிருந்து விலகுகி றேன். எனது தலைமையில் 10 தொகுதி செயலாளர்கள் உட்பட மாநில நிர்வாகிகள் ஏராளமானோர் காங்கிரஸில் இணைந்தோம்” என்று குறிப்பிட்டார்.
மக்கள் நலக் கூட்டணி சார்பில் போட்டியிடும் தேமுதிக வேட் பாளர்கள் 6 பேரும் காங்கிரஸில் இணைவதாகவும் தகவல் பரவி யது. ஆனால், அவர்கள் தரப்பில் கூறும்போது, “நாங்கள் தேமுதிக வில் தான் நீடிக்கிறோம். முரசு சின்னம் தரப்படாததால் வருத் தத்தில் உள்ளோம்” என்றனர்.