மாநிலங்களவைத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர்களாக டி.கே. எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ். பாரதி ஆகியோரை அக்கட்சியின் தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று நிருபர் களிடம் கருணாநிதி கூறும்போது, ‘‘ஜூன் 11-ம் தேதி நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலில் திமுக சார்பில் அமைப்புச் செய லாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே. எஸ். இளங்கோவன் ஆகியோர் போட்டியிடுவர். அடுத்து வரும் வாய்ப்புகளில் திமுக தொழிற்சங்க மான தொழிலாளர் முன்னேற்ற சங்கத்துக்கு முன்னுரிமை அளிக் கப்படும்’’ என்றார்.
நாடாளுமன்ற மாநிலங்கள வையில் தமிழகத்தைச் சேர்ந்த கே.பி.ராமலிங்கம், எஸ்.தங்க வேலு (திமுக), சுதர்சன நாச்சியப் பன் (காங்கிரஸ்), ஏ.நவநீதகிருஷ் ணன், பால் மனோஜ் பாண்டியன், ஏ.ட பிள்யூ. ரபி பெர்னார்ட் (அதிமுக) ஆகிய 6 பேர் உட்பட நாடு முழுவதும் 57 எம்.பி.க்களின் பதவிக்காலம் நிறைவடைகிறது. இந்த காலியிடங்களுக்கு ஜூன் 11-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர் தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல், வரும் 24-ம் தேதி தொடங்குகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை ஒரு மாநிலங்களவை உறுப்பி னர் இடத்தில் வெற்ற பெற 34 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. தற்போது திமுக கூட்டணிக்கு 98 எம்எல்ஏக்கள் இருப்பதால் டி.கே. எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ். பாரதி ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர் ஆவது உறுதி யாகியுள்ளது. இதன்மூலம் மாநி லங்களவையில் திமுகவின் பலம் குறையாமல் 4 ஆகவே இருக்கும்.
திமுகவில் அமைப்புச் செயலாளராக இருந்த டி.கே.எஸ். இளங்கோவன் கடந்த 2009 மக்க ளவைத் தேர்தலில் வடசென்னை தொகுதியில் வெற்றி பெற்றார். 2014 தேர்தலில் தென்சென்னை தொகுதியில் தோல்வியடைந்தார். திமுக சட்டத் துறை செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புக ளில் இருந்துள்ள ஆர்.எஸ்.பாரதி, ஆலந்தூர் நகராட்சித் தலைவராக பல ஆண்டுகள் பதவி வகித்துள் ளார். 2009 மக்களவைத் தேர் தலில் தென்சென்னையில் தோல் வியடைந்தார். தற்போது திமுக அமைப்புச் செயலாளராக இருந்து வருகிறார். கருணாநிதியின் தீவிர ஆதரவாளர்களான இருவருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸுக்கு இழப்பு
தமிழகத்தில் இருந்து காங்கி ரஸ் சார்பில் சுதர்சன நாச்சியப் பன் மட்டுமே மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார். தற்போது அவரது பதவிக்காலமும் முடிகிற து. மக்களவையிலும் தமிழக காங் கிரஸ் சார்பில் யாரும் இல்லை. மாநிலங்களவைக்கு தமிழக காங் கிரஸ் சார்பில் வேறு யாரும் இப்போது எம்.பி. ஆகும் வாய்ப்பு மிகவும் குறைவு. எனவே, முதல் முறையாக தமிழகத்தில் இருந்து காங்கிரஸுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரதிநிதித்து வம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.