அரக்கோணம்: அரக்கோணத்தில் இருந்து நிறுத்தி வைக்கப்படிருந்த கன்டோன்மென்ட் ரயில் சேவை நேற்று முதல் தொடங்கியது. அதேநேரம், பயணிகள் ரயில் முன்பதிவு இல்லாத ‘மெமு’ சிறப்பு விரைவு ரயிலாக மாற்றம் செய்துள்ளனர்.
அரக்கோணம் ரயில் நிலை யத்தில் இருந்து நேற்று காலை 7.10 மணிக்கு புறப்பட்ட ரயில் காலை 9.45 மணிக்கு வேலூர் கன்டோன்மென்ட் ரயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்தது. காலை 10 மணிக்கு புறப்பட்டு 11.50 மணிக்கு அரக்கோணம் சென்றடைந்தது.
தொடர்ந்து, அரக்கோணத்தில் இருந்து பகல் 2.05 மணிக்கு புறப்பட்டு மாலை 4.35 மணிக்கு வேலூர் கன்டோன்மென்ட் அடையும். மாலை 5.10 மணிக்கு புறப்பட்டு இரவு 7.15 மணிக்கு அரக்கோணம் சென்றடையும். அரக்கோணத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு இரவு 10.50 மணிக்கு காட்பாடி வரை இயக்கப்படும்.
மறுநாள் காலை காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து காலை 4.25 மணிக்கு விரைவு ரயிலாக புறப்பட்டு காலை 6.05 மணிக்கு அரக்கோணம் சென்றடையும். அதன் பிறகு அரக்கோணம்-கன்டோன்மென்ட் ரயில் நிலையம் வரை இந்த ரயில் இயக்கப்படும்.
குறைந்த கட்டணத்தில் சாதாரண பயணிகள் ரயிலாக இயக் கப்பட்டு வந்த இந்த ரயில் பெயர் மாற்றம் செய்து கட்டணத்தையும் உயர்த்தியிருப்பது பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அரக்கோணத்தில் இருந்து காட்பாடிக்கு ரூ.20 கட்டணத்தில் இருந்த சேவை தற்போது ரூ.40 ஆக உயர்த்தியுள்ளனர். 2 ஆண்டு களுக்கு பிறகு ரயில் மீண்டும் இயக்கப்பட்ட நிலையில் இந்த கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும் என்றும் பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.