சென்னை: தமிழகத்தில் கற்றுதரப்படும் போலியான நர்சிங் படிப்புகள் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு செவிலியர் குழுமும் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் பல கல்லூரிகளில் பல வகையான நர்சிங் படிப்புகள் கற்றுத் தரப்படுகிறது. இவ்வாறு பல படிப்பு போலியான படிப்புகள் என்று தமிழக நர்சிங் குழுமம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் வாயிலாகத் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தமிழக செவிலியர் குழுமும் வெளியிட்டுள்ள அறிவிப்பின் முழு விவரம்:
தமிழ்நாட்டில் நர்சிங் கல்லூரிகளுக்கு அங்கீராம் அளிப்பது தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் மற்றும் இந்திய நர்சிங் கவுன்சில் ஆகும். எனவே நர்சிங் படிப்புகளில் சேரும் மாணவர்களின் தாங்கள் சேரும் கல்லூரி அங்கீகராம் பெற்றுள்ளதாக என்பதை https://www.tamilnadunursingcouncil.com/recognised_institutions.php என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்தியா முழுவதும்
1.Certificate Course in Auxiliary Nursing & Midwifery
2) Diploma in General Nursing & Midwifery
3) B.Sc., (Nursing)
என்ற 3 படிப்புகள் மட்டும் அங்கீகாரம் பெற்ற படிப்புகள் ஆகும். நர்சிங் பயிற்சி என்ற பெயிரில் பல பெரிய மற்றும் சிறிய மருத்துவமனைகள், நிறுவனங்கள் பல்கலைக்கழங்கள், கல்லூரிகள் போலி நர்சிங் படிப்புகளை நடத்தி சான்றிகழ்களை வழங்குகிறார்கள். இதன் விவரம்
டிப்ளமா இன் நர்சிங் அஸிஸ்டென்ட் கோர்ஸ்
டிப்ளமா இன் நர்சிங்
டிப்ளமா இன் ஃபர்ஸ்ட் எய்டு நர்சிங்
வில்லேஜ் ஹெல்த் நர்சிங்
டிப்ளமா இன் நர்சிங் எய்டு
டிப்ளமா இன் ஃபர்ஸ்ட் எய்டு & ப்ராக்டிகல் நாசிங்
டிப்ளமா இன் ப்ராக்டிகல் நர்சிங்
சர்டிஃபிகேட் இன் நர்சிங்
அட்வான்ஸ்டு டிப்ளமா இன் நாசிங் அஸிஸ்டென்ட் )
டிப்ளமா இன் ஹெல்த அஸிஸ்டென்ஸ்
நர்ஸ் டெக்னிஸியன் கோர்ஸ்
ஹெல்த் கைடு கோர்ஸ்
சர்டிஃபிகேட் இன் ஹெல்த் அஸிஸ்டென்ட்
சர்டிஃபிகேட் இன் ஹாஸ்பிட்டல் அஸிஸ்டென்ட்
சாடிஃபிகேட் இன் பெட்ஸைடு அஸிஸ்டென்ட்
சாடிஃபிகேட் இன் பேஷன்ட் கேர்
சர்டிஃபிகேட் இன் ஹோம் ஹெல்த் கேர்
இந்த சான்றிதழ்களை செலிவியர் குழுமத்தில் பதிவு செய்ய முடியாது.
தமிழ்நாடு நர்சிங் கவுன்சியின் சட்டப் பிரிவு 12 (a) (1) மற்றும் (2)ன் படி இதுப்போன்ற போலி படிப்புகளை நர்சிங் என்ற பெயரில் நடத்தும் நிறுவனம். சங்கம் மற்றும் பல்கலைக்கழகங்கள் மீது அபராதமும் உரிய நடவடிக்கையும் எடுக்கப்படும். மேலும் சென்னை உயர்நீதி மன்ற ஆணை WP No.16556 of 2014 நாள் 13.04.2015-ன் படி போலி நர்சிங் பயிற்சி நிறுவனங்களின் மீது தமிழக அரசின் நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்படும். மேலும் அங்கீகரிக்கப்படாத படிப்புகளை படிந்தால் அரசுப்பணியில் சேர முடியாது.
அங்கீகரிக்கப்படாத படிப்புகளை படிந்தால் அரசுப்பணியில் சேர முடியாது தெரிவத்துக்கொள்கிறோம். இந்த மாண, மாணவியர்கள் எந்த ஒரு மருத்துவமனைகளிலும் அங்கீகரிக்கப்பட்ட செவிலியராக பணிபுரிய இயலாது மற்றும் நர்சிங் கவுண்சிலில் இப்படிப்பினை பதிவு செய்ய இயலாது. அங்கீகாரம் இல்லா சான்றிதழ் கொண்டு பணிபுரிவதாக நர்சிங் கவுன்சிலின் கவனத்திற்கு தகவல் வந்தால் கவுன்சிலின் சட்டப்படி அவர்களுக்கு அபராதமும் மற்றும் கிரிமினல் நடவடிக்கை எடுப்பதற்கும் வாய்ப்புள்ளது.
இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.