தமிழகம்

தனியார் நிறுவனம் குறித்து அவதூறு போஸ்டர் ஒட்டிய 7 பேர் மீது வழக்கு

செய்திப்பிரிவு

தனியார் நிறுவனம் குறித்து அவதூறாக போஸ்டர் ஒட்டிய 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட் டுள்ளது.

சென்னை அமிர்தா ஹோட்டல் மேனேஜ்மென்ட் நிறுவனத்துக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் சென்னையில் பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

இதுகுறித்து அந்நிறுவன தலைமை செயல் அலுவலர் ராஜ ராஜேஸ்வரன் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். தொழில் போட்டியின் காரணமாக, திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த வினோத் கண்ணன், விமல், சங்கர், சுரேஷ்குமார், மணிமேகலை, சதீஷ்குமார், கோவையைச் சேர்ந்த சரவணன் ஆகியோர் கூட்டாக சேர்ந்து அவதூறு போஸ்டர்களை ஒட்டியிருப்பதாக புகாரில் தெரிவித்திருந்தார்.

புகாரின்பேரில் மாம்பலம் போலீஸார் விசாரணை நடத்தியதில் அவதூறு போஸ்டர் ஒட்டியது உண்மை என்பது தெரிந்தது. அதைத் தொடர்ந்து 7 பேர் மீதும் 3 பிரிவுகளின் கீழ் மாம்பலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

          
SCROLL FOR NEXT