விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தடையின்றி நடந்தே தீரும் என இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்தார்
இந்துக்களின் உரிமைகளை மீட்கப் பிரச்சாரப் பயணம் திருச்செந்தூரில் தொடங்கி நேற்று மதுரை வந்தது. மதுரை மாநகர இந்து முன்னணி சார்பில் ஜான்சிராணி பூங்கா திடலில் பிரச்சார பயண பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பேசினார். பின்னர் அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
கரோனா காரணமாக இரண்டு ஆண்டுகள் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை இந்து முன்னணி நடத்தாமல் இருந்தது.
இந்த ஆண்டு இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் எந்தவித தடையுமின்றி கிராமங்கள், நகரங்கள் தோறும் நடைபெறும். விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், ஊர்வலம் நடத்துவதற்கும் தேவையான அனைத்து முயற்சிகளையும் இந்து முன்னணி எடுத்து வருகிறது என்றார்.