கடலூர் வேளாண் பொறியியல் துறை மூலம் தேங்காய் பறிக்க பிரத்யேக இயந் திரம் தருவிக்கப்பட்டுள்ளது.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கி ணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட குறிஞ்சிப்பாடி வட்டாரம் கோதண்டராமபுரம் கிராமத்தில்,நேற்று அட்மா திட்டத்தின் கீழ் வேளாண்பண்ணைக் கருவிகள் பயன்பாடு குறித்துவிவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட் டது. குறிஞ்சிப்பாடி வேளாண்மை உதவிஇயக்குநர் பூவராகன் தலைமை தாங்கி னார். கடலூர் வேளாண்மை பொறியியல் துறை உதவி பொறியாளர்கள் கிருஷ் ணராஜ், அருள் கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் வேளாண் மைக்கு உதவும் பண்ணைக் கருவிகளின் செயல்பாடுகள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி மற்றும் செயல்விளக்கம் நடத் தப்பட்டது. ஊராட்சிமன்றத் தலைவர் ஜெயா சுரேஷ், ஒன்றிய குழு உறுப்பினர் வளர்மதி செந்தில்குமார் மற்றும் முன்னோடி விவசாயிகள் கோவிந்தராஜ், பாலமுரளி ஆகியோர் பங்கேற்று திட்டம் குறித்த சந்தேகங்களுக்கு தெளிவும், இதர நலத்திட்டங்களை விவசாயிகள் பெறுவது குறித்தும் விளக்கம் பெற்றனர்.
வேளாண் பட்ஜெட்டில் அறிவித் தவாறு, கடலூர் மாவட்டத்திற்கு தென்னைமரங்களில் எளிதாக காய் பறிக்க உதவும் பிரத்யேக இயந்திரம் வேளாண்துறை மூலம் தருவிக்கப்பட்டு அதன்செயல்விளக்கம் செய்து காண்பிக்கப் பட்டது.
ஒரு இடத்தில் நிறுத்திய படியே 6 முதல் 7 மரங்களில் ஒரே தருணத்தில்காய் பறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. ஒரு மணிநேரத்தில் 20 மரங்கள் வரை காய் பறிக்க இயலும் எனத் தெரிவிக்கப்பட்டது. வேளாண் பொறியியல் துறையின் இ.வாடகை செயலி மூலம் முன்பதிவு செய்து வேளாண் கருவிகளை வாடகைக்கு பயன்படுத்தவும் கேட்டுக்கொள் ளப்பட்டது.
இதைபோலவே விவசாய குழுவின ருக்கு பண்ணைக்கருவிகள் சேவை மையம் அமைக்க உதவும் மானிய திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டது. இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரியா ராணி மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் மனோஜ் ஆகியோர் செய்திருந்தனர்.