திருப்பத்தூரில் தவறவிட்ட பணம், மொபைலை எடுத்து போலீஸாரிடம் ஒப்படைத்த பெண்ணை பாராட்டினர்.
திருப்பத்தூர் காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் புஷ்பலதா. இவர் நேற்று மதுரை சாலையில் உள்ள ஒரு கடையில் காய்கறி வாங்க இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது ரூ.5,000 ரொக்கம், மொபைல் போன், வீட்டின் சாவி, 2 ஏடிஎம் கார்டுகள் போன்றவை இருந்த கைப்பையைத் தவறவிட்டார்.
இந்நிலையில், தென்மா பட்டியைச் சேர்ந்த சண்முகப்பிரியா என்பவர் கீழே கிடந்த புஷ்பலதாவின் கைப்பையை எடுத்துள்ளார். அதில் பணம், மொபைல் போன் இருந்ததை கண்டதும் திருப்பத்தூர் நகர் காவல் நிலைய எஸ்ஐ மலைச்சாமியிடம் ஒப்படைத்தார்.
அதன் பிறகு போலீஸார் புஷ்பலதாவை வரவழைத்து பணம், மொபைல் போன் உள்ளிட்ட பொருட்களை ஒப்படைத்தனர். சண்முகபிரியாவை பாராட்டினர்.