தமிழகம்

உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியர்களை தொடர்ந்து வஞ்சிக்கும் அரசு: ஆசிரியர் சங்கம்

செய்திப்பிரிவு

உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியர்களை அரசும், கல்வித்துறையும் தொடர்ந்து வஞ்சித்து வருவதாக தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளரும், இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய செயலாளருமான அ.சங்கர் குற்றம் சாட்டினார்.

சிவகங்கையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 2020-21-ம் கல்வியாண்டில் கல்வித் துறையில் பணிபுரியும் அனைத்து நிலை ஆசிரியர்களுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டது. ஆனால் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்கவில்லை.

உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியர்களை அரசும், கல்வித்துறையும் தொடர்ந்து வஞ்சித்து வருகின்றன.

உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பதவி உயர்வுக்காக காத்திருக்கும் 5,000 இடைநிலை ஆசிரியர்களுக்கு உடனடியாக பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும்.

ஏற்கெனவே 20 ஆண்டுகள் பணி முடித்துள்ள இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வில் செல்வதில் அரசுக்கு எவ்வித நிதிச்சுமையும் ஏற்படாது. மேலும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிய பிறகு, புதிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். அதுவும் ஒப்பந்த முறையில் ஆசிரியர்களை நியமனம் செய்ய கூடாது என்றார்.

SCROLL FOR NEXT