தமிழகம்

மே 16-ல் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு: தொழிலகப் பாதுகாப்புத் துறை அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நாளான மே 16-ம் தேதி (திங்கள்கிழமை) அனைத்து தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்குமாறு தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அத்துறையின் இயக்குநர் பி.போஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம்-1951, சட்டப் பிரிவு 135-பி-ன் படியும், தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல் படியும், தமிழகத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளும் அவற்றில் பணிபுரியும் நிரந்தர, தற்காலிக தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள், தினக்கூலி தொழிலாளர்கள் அனைவருக்கும் தேர்தல் வாக்குப்பதிவு நாளான மே 16-ம் தேதி (திங்கள்கிழமை) சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்கும் பொருட்டு, சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

வாக்களிப்பதற்காகவே இந்த விடுமுறை விடப்படுகிறது. எனவே, அனைவரும் வாக்களிக்கவும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT