தமிழகம்

தென் தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

செய்திப்பிரிவு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் நிருபர்களி டம் நேற்று கூறியதாவது:-

நாகப்பட்டினம் - பாம்பன் இடையே வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது தற்போது தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியிருக்கிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வங்கக்கடலில் தென்மேற்கில் இருந்து வடமேற்கு திசையில் இலங்கை நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் வாய்ப்புள்ளது.

இந்த மண்டலமானது செவ்வாய்க் கிழமை (நாளை) காலை நாகப்பட்டினத் துக்கும் பாம்பனுக்கும் இடையே தமிழ் நாடு, புதுச்சேரி கடலோரப் பகுதியில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. திங்கள்கிழமை (இன்று) மாலை மணிக்கு 50 கி.மீ. முதல் 60 கி.மீ. வேகத்தில் சூறாவளி வீசும், எனவே, தென்மேற்கு மாவட்டங்களில் பரவலாக அநேக இடங்களிலும், மாநிலத்தின் ஒருசில இடங்களிலும் மிக கனமழையும், ஒருசில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத் தில் தமிழகத்தின் பல்வேறு இடங்க ளில் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக அவினாசி, இரணிய லில் தலா 5 செ.மீ. மழையும், பெரிய நாயக்கன்பாளையம், வேதாரண்யத்தில் தலா 4 செ.மீ. மழையும், தக்கலை, கோவை தெற்கு, ஜி. பஜார் (நீலகிரி), குளச்சல் ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மிதமான வானிலை நிலவும் என்றார்.

SCROLL FOR NEXT