தமிழகம்

காவல் உதவி ஆணையர் காந்தியிடம் சிபிஐ தீவிர விசாரணை

அ.சாதிக் பாட்சா

1995-ம் ஆண்டு அப்போது ஒருங்கி ணைந்த திருச்சி மாவட்டத்தில் இடம்பெற்றிருந்த குன்னம் காவல் நிலைய சரகத்துக்கு உட்பட்ட வேப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பாண் டியன் என்பவர் மர்மமான முறை யில் அங்குள்ள ஆற்றங்கரை அருகே ஒரு மரத்தில் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கிடந்தார்.

காவல்துறையினரால் விசார ணைக்கு அழைத்துச் செல்லப்பட் டவர் சந்தேகத்துக்கிடமான வகை யில் தூக்கில் தொங்கியதால் அப்போது நீதி கேட்டு பல்வேறு அமைப்பினர் போராட்டங்களை நடத்தினர். வருவாய் கோட்டாட்சியர் நடத்திய விசாரணையில் பாண்டி யன் மரணம் தற்கொலை என அறிவித்து வழக்கு முடிக்கப்பட்டது.

ஆனால், பாண்டியனின் மனைவி இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து 2013-ம் ஆண்டு சாதக மான உத்தரவை பெற்றார். இந்த வழக்கை கையிலெடுத்த சிபிஐ கடந்த மே 27-ம் தேதி இந்த வழக் கில் தொடர்புடைய மதுரை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறை காவல் துறை உதவி ஆணையர் கஸ்தூரி காந்தி, திருச்சி விமான நிலைய குடியேற்றப் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் ரவி ஆகியோரை கைது செய்தது.

இவர்கள் இருவரையும் ஜூன் 9-ம் தேதிவரை நீதிமன்றக் காவலில் சிறையிலடைக்க திருச்சி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், காவல் உதவி ஆணையர் காந்தி தனக்கு நெஞ்சு வலிப்பதாகக் கூறியதால், திருச்சி அரசு மருத்துவக் கல் லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப் பட்டார். உதவி ஆய்வாளர் ரவி சில தினங்கள் சிறையில் இருந்த வர் பிறகு அவரும் இடுப்பு வலி எனச் சொல்லி காவல் உதவி ஆணையர் காந்தி அனுமதிக் கப்பட்ட திருச்சி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக் கப்பட்டார். பிறகு நீதிமன்ற உத்தர வைப் பெற்று கஸ்தூரி காந்தி திருச்சியிலுள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் இருவரையும் 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ தரப்பில் திருச்சி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு செய்தனர். இந்த மனு மீது விசாரணை நடத்திய தலைமை குற்றவியல் நடுவர் பாலச்சந்திரன், காவல் உதவி ஆணையர் காந்தியி டம் தினமும் 2 மணி நேரம் மருத்துவர்களை உடன் வைத்துக் கொண்டு விசாரணை செய்ய வேண் டும். ஜூன் 9-ம் தேதி மதியம் 3 மணிக்குள் அவரிடம் விசார ணையை முடித்து விட வேண்டு என உத்தரவிட்டார். இந்த உத் தரவு வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்குமேல் வழங்கப்பட்டது. இந்த உத்தரவால் சிபிஐ குழுவினர் தரப்பில் அதிருப்தியடைந்தாலும் வேறு வழியின்றி திருச்சியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காந்தியி டம் சனிக்கிழமை 2 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். இதில் சில முக்கியத் தகவல் கள் சிபிஐ-க்கு கிடைத்த தாகக் கூறப்படுகிறது. ஞாயிற்றுக் கிழமையும் காந்தியிடம் சிபிஐ தரப்பில் விசாரணை மேற்கொள் ளப்படும் என தெரிகிறது.

சிபிஐ தரப்பினரின் கடுமையான விசாரணையைத் தவிர்ப்பதற்காக காந்தி பகீரதப் பிரயத்தனம் செய்து வருகிறார். இதற்காக சட்ட ரீதியாக பல்வேறு விதமாக போராடி வருகின்றனர் அவரது வழக்க றிஞர்கள். ஆனாலும், இந்த வழக் கில் துருப்புச்சீட்டாக இருவரி டமும் ஏற்கெனவே ஒப்புதல் வாக்கு மூலத்தை சிபிஐ குழுவினர் வாங்கி பதிவு செய்து வைத்திருப் பதால், காந்தி தற்காலிகமாக வேண்டுமானால் தப்பிக்கலாம். ஆனால், வழக்கின் முடிவில் கிடைக்கப்போகும் தண்டனை யிலிருந்து தப்பிக்க முடியாது என்கிற பேச்சு சிபிஐ வட்டாரத்தில் உலா வருகிறது.

SCROLL FOR NEXT