கோவிந்தசாமி. (கோப்புப்படம்) 
தமிழகம்

கண்ணமங்கலம் அருகே மின் கம்பி அறுந்து விழுந்ததில் விவசாயி உயிரிழப்பு

செய்திப்பிரிவு

கண்ணமங்கலம் அருகே மின் கம்பி அறுந்து விழுந்ததில் விவ சாயி உயிரிழந்தார். திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த அம்மா பாளையம் கிராமத்தில் வசித்தவர் கோவிந்தசாமி(68).

பணி நிறைவு பெற்ற நில அளவை அலுவலர். இவர், தனது நிலத்தில் நேற்று விவசாய பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர் மீது, நிலத்தின் வழியாக செல்லும் மின் கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

இது குறித்து கண்ணமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, “பழுதடைந்த பலவீனமாக உள்ள மின் கம்பிகளை அகற்றிவிட்டு புதிய மின் கம்பிகளை பொறுத்த வேண்டும் என மின்சார வாரிய அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டது.

அவர்களது அலட்சியத்தால், விவசாயி கோவிந்தசாமி உயிரிழந்துள்ளார். பலவீனமாக உள்ள மின் கம்பிகளை மாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுகொண்டனர்.

SCROLL FOR NEXT