தமிழகம்

கள்ளக்குறிச்சி | விசிலடித்து மாற்றுத் திறனாளிகள் நடத்திய கவன ஈர்ப்பு போராட்டம்

ந.முருகவேல்

கள்ளக்குறிச்சி: 19 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம் எதிரே வாய்பேசாத மற்றும் காது கேளாத மாற்றுத் திறனாளிகள் விசிலடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பில் ஒரு சதவீத பணி வழங்கிடுதல், மாதாந்திர உதவி தொகையை ரூ.3000 ஆக உயர்த்தி வழங்க கோருதல், ஆவின் பாலகம் அமைத்து தருதல், ஓட்டுநர் பயிற்சி முகாம் நடத்தக் கோருதல், தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் நல வாரியத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு பணி கோருதல் உள்ளிட்ட 19 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வாய்பேசாத மற்றும் காது கேளாத மாற்றுத் திறனாளிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் போது பொதுமக்கள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில், மாற்றுத் திறனாளிகள் வாயில் விசிலை வைத்து தொடர்ந்து ஒரு மணி நேரம் ஒலி எழுப்பினர்.

இதில் தலைமை நிர்வாகிகள் பிரகாஷ், சாகுல் ஹமீது உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT