முதல்வர் ஸ்டாலின் | கோப்புப் படம் 
தமிழகம்

'உயிர் காக்கும் மருத்துவர்களை போற்றுவோம்': தேசிய மருத்துவர்கள் தினத்தில் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

செய்திப்பிரிவு

சென்னை: "பிணி நீக்கி நம் உயிர் காக்கும் மருத்துவர்களைப் போற்றிடுவோம்" என்று முதல்வர் ஸ்டாலின் தேசிய மருத்துவர்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

மருத்துவ பணிக்கு தன்னை அர்ப்பணித்துகொண்டவர் டாக்டர் பிதான் சந்திர ராய். மருத்துவ மாமேதையான இவர் பிஹார் மாநிலத்தில் பாட்னாவை சேர்ந்தவர். இவரது பிறந்த நாளான இன்று தேசிய மருத்துவர்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது.

மகாத்மா காந்திக்கு நெருக்கமான இவர் காந்தியுடன் இணைந்து நாட்டின் விடுதலைக்காக போராடினார். இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக இருந்து மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வராக பொறுப்பு வகித்தவர்.

ஏழைகளுக்கு என்று தன்னுடைய வீட்டை மருத்துவமனையாக கட்டிகொள்ள அனுமதி அளித்த டாக்டர் பிசி ராய் முதல்வராக இருந்தபோதும் இலவசமாக மருத்துவம் செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துப் பதிவில்: "ஏழை மக்களுக்கு அன்புள்ளத்தோடு சிகிச்சை அளித்ததோடு, விடுதலைப் போராட்டத்திலும் பங்கெடுத்து, பின்னாளில் மேற்கு வங்க முதல்வராக உயர்ந்த மருத்துவர் பிசி ராய்

அவர்களின் பிறந்தநாளான இன்று, "தேசிய மருத்துவர்கள் தினம்! பிணி நீக்கி நம் உயிர் காக்கும் மருத்துவர்களைப் போற்றிடுவோம்!" என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT