தமிழகம்

பழனிசாமியை முதல்வராக்கியது பாஜக: நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ கருத்து

செய்திப்பிரிவு

தூத்துக்குடி: ‘‘பழனிசாமியை பாஜகதான் முதல்வராக்கியது’’ என்று, தமிழக பாஜக துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ கூறினார்.

திருச்செந்தூரில் அவர் கூறியதாவது: 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து பாஜக தேர்தலை சந்திக்கும். தலைவர்களின் மறைவுக்கு பின் ஏற்படும் இடைவெளியில் அதிமுகவில் சிறு, சிறு பிரச்சினைகள் ஏற்படுவது வழக்கம்தான்.

பின்னர் அது சரியாகிவிடும். அதிமுகவில் ஒற்றைத் தலைமை என்பது இபிஎஸ்-ஓபிஎஸ் இடையே உள்ள தனிப்பட்ட பிரச்சினை.

பழனிசாமியை முதல்வர் ஆக்கியதே பாஜகதான். தொடர்ந்து எல்லா வகையிலும் அவருக்கு ஆதரவாக இருந்து வந்துள்ளோம். எனவே, அதிமுகவுடன் கூட்டணி தொடரும்.

சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வீட்டில் ஒருவருக்கு கட்டாய ராணுவப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தியாவில் அதுபோல் இல்லாத நிலையில் அக்னிப்பாதை திட்டம் இளைஞர்களுக்கு நல்ல வாய்ப்பாகும்.

தமிழகத்தில் ஒரு காலத்தில் பாஜக போராட்டம் நடத்தினால் வெளியே தெரியாது. ஆனால் இப்போது பாஜக போராட்டத்தில் பொதுமக்கள் அதிகம் பங்கேற்கின்றனர் என்றார்.

SCROLL FOR NEXT