தமிழக சட்டப்பேரவை தேர்தல் பணிகளை கவனிப் பதற்காக தனி டிஜிபியாக கே.பி.மகேந்திரனை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கு.ஞானதேசிகன் நேற்று வெளி யிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழக டிஜிபி (பயிற்சி) கே.பி.மகேந்திரன், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் காவல்துறை தொடர்பான அனைத்து பணிகளையும் கவனிப் பதற்காக தனி டிஜிபியாக நியமிக் கப்பட்டுள்ளார். இவர் தனது பணி தொடர்பாக டிஜிபிக்கு எந்த தகவலையும் தெரிவிக்க வேண் டியதில்லை. தேர்தல் தொடர் பான அனைத்து பணிகள், ஏற்பாடு களில் உள்ள காவல்துறை அதிகாரிகள் அனைவரும் தனி டிஜிபி கே.பி.மகேந்திரனுக்கு மட்டுமே தகவல் தெரிவிக்க வேண் டும். தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் முடியும்வரை இவர் இந்தப் பொறுப்பில் இருப்பார். தலைமைத் தேர்தல் ஆணையத் தின் வழிகாட்டுதலின்படி இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட் டுள்ளது.
தமிழக அரசின் உளவுத்துறை கூடுதல் டிஜிபி பதவியில் இதுவரை யாரும் நியமிக்கப்பட வில்லை. உளவுத்துறை ஐஜியாக கே.என்.சத்தியமூர்த்தி உள்ளார். தேர்தலை முன்னிட்டு, கே.என்.சத்தியமூர்த்தி மாற்றப்பட்டு, அவருக்கு பதில் உளவுத்துறையின் கூடுதல் டிஜிபி பதவியில் கரன் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார்.
அம்பத்தூர் துணை கமிஷனர் ஆர்.சுதாகர், தஞ்சை எஸ்.பி.யாக வும் அண்ணாநகர் துணை கமிஷனர் ரூபேஷ்குமார் மீனா, ஈரோடு எஸ்.பி.யாகவும் நியமிக் கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவுகளை உள்துறைச் செயலாளர் அபூர்வ வர்மா வெளியிட்டுள்ளார். இடமாற்றம் செய்யப்பட்டுள்ள ஐஜி கே.என்.சத்தியமூர்த்தி, எஸ்.பி.க்கள் மயில்வாகனன், சிபிசக்கரவர்த்தி ஆகியோருக்கு பணிகள் ஒதுக்கப்படவில்லை.
கரூர் ஆட்சியராக தமிழ்நாடு நகர்ப்புற கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனம் (டுபிசெல்) மேலாண் இயக்குநர் காக்கர்லா உஷா நியமிக்கப்பட்டுள்ளார். கோ ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநர் டி.என்.வெங்கடேஷ், திருவாரூர் ஆட்சியராகவும், அனைவருக்கும் கல்வி திட்ட மாநில திட்ட அதிகாரி பூஜா குல்கர்னி திருவண்ணாமலை ஆட்சியராகவும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் சி.சமயமூர்த்தி நெல்லை ஆட்சியராகவும், தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் கட்டமைப்பு வளர்ச்சிக் கழக (டுபிட்கோ) மேலாண் இயக்குநர் எஸ்.ஸ்வர்ணா புதுக்கோட்டை ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதில், கரூர் மற்றும் புதுக்கோட்டை ஆட்சியர் பதவிகள் முதுநிலை ஆட்சியர் பதவியாக உருவாக்கப்பட்டுள்ளன. இதற் கான உத்தரவை தமிழக தலைமைச் செயலாளர் கு.ஞானதேசிகன் பிறப்பித்துள் ளார். மாவட்ட ஆட்சியர்களாக இருந்த டி.பி.ராஜேஷ் (கரூர்), எம்.மதிவாணன் (திருவாரூர்), ஏ.ஞானசேகரன் (திருவண் ணாமலை), எம். கருணாகரன் (நெல்லை), எஸ்.கணேஷ் (புதுக்கோட்டை) ஆகியோ ருக்கு புதிய பணியிடம் ஒதுக்கப்படவில்லை.