மண்டகொளத்தூர் அரசு மேல்நிலை பள்ளி சுற்றுச்சுவருக்கு வெள்ளை அடிக்கும் பணி நடைபெறுகிறது. 
தமிழகம்

தி.மலை | மண்டகொளத்தூரில் பொலிவிழந்த அரசு மேல்நிலை பள்ளிக்கு விடியல் பிறந்தது: இணைந்தது ‘இளைஞர்களின் கரங்கள்’

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: மண்டகொளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியை பொலி வுடன் மாற்றும் முயற்சியில் மக்கள் மன்றம் மற்றும் முன்னாள் மாணவர் சங்கத்தினர் ஈடுபட் டுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த மண்டகொளத்தூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியின் கட்டிடம் மற்றும் சுற்றுச்சுவர் ஆகியவை பொலிவிழந்து காணப் பட்டது. இதற்கு புதிய வர்ணம் பூசி, எழில்மிகு தோற்றத்துடன் காட்சியளிக்க உதவிட வேண்டும் என பள்ளி கல்வித் துறைக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்தும் பலனில்லை.

இதையடுத்து, அரசு மேல் நிலைப் பள்ளியை புதிய பொலி வுடன் மேம்படுத்த, மண்ட கொளத்தூர் மக்கள் மன்றம் மற்றும் முன்னாள் மாணவர் சங்கம் களம் இறங்கியுள்ளது.

கிராம மக்கள் மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன் பள்ளி கட்டிடம் மற்றும் சுற்றுச்சுவர் ஆகியவற்றுக்கு வர்ணம் பூசும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சுற்றுச் சுவரில் வர்ணம் பூசிய பிறகு, தேசத் தலைவர்களின் புகைப்படங்களை வரையவும் திட்டமிடப் பட்டுள்ளது.

இது குறித்து மண்டகொளத்தூர் மக்கள் மன்ற நிறுவனர் ம.பி.கந்தன் கூறும்போது, “மண்ட கொளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியை முன்மாதிரி பள்ளியாக மாற்றும் முயற்சியில் ஈடுபட் டுள்ளோம்.

மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்த வேண்டுமென்றால், எழில்மிகு தோற்றத்துடன் சுற்றுச்சூழலும் அமைய வேண்டும். மேலும், மாணவர் களுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளும் கிடைக்க வேண் டும். இதற்கான முன்னெடுப்பு பணியை தொடங்கியுள்ளோம்.

முதற்கட்டமாக, பள்ளியின் சுற்றுச்சுவர் மற்றும் கட்டிடத்துக்கு புதிய வர்ணம் பூசும் பணியை தொடங்கியுள்ளோம். வர்ணம் பூசி முடிக்கப்பட்டதும், தேசத் தலைவர்களின் படங்களை வரையவுள்ளோம். அதன்மூலம், அவர்களது தியாகத்தை மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம். அதன்பிறகு, பள்ளியின் கட்டிடங் களுக்கு வர்ணம் பூச உள்ளோம். பள்ளியில் 3 வகுப்பறைகள் பயன் படுத்தபடாததால், வவ்வால்கள் குடி கொண்டுள்ளன. அதனை அகற்றி விட்டு, வகுப்பறைகளை பழுது நீக்கியதும், வர்ணம் பூசப்படும்.

மாணவர்களுக்கு தேவையான இருக்கை மற்றும் டேபிள் ஆகிய வற்றை வாங்கி கொடுக்கவும் உள்ளோம். கழிப்பறைகள், சீரமைத்து கொடுக்கப்படும். மாணவர்களுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதி செய்து கொடுப்பதற்கான முயற்சியும் மேற்கொள்ளப்படும். பொருளா தார நிலையில், பின்தங்கி உள்ள மாணவர்களின் கல்வி செலவையும் ஏற்க உள்ளோம். எங்களது முயற்சிக்கு கிராம மக்களும், தன்னார்வலர்களும் உறுதுணையாக இருக்கின்றனர்” என்றார்.

SCROLL FOR NEXT