சென்னை: புற்று நோய் சிகிச்சையை மேம்படுத்த சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவனையில் திறன் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியின் கீழ் செயல்பட்டு வரும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் புற்று நோய் சிகிச்சை மையத்தில் ஆண்டு தோறும் 13,000 பேர் சிகிச்சை பெற்ற வருகின்றனர். குறிப்பாக பெண்கள் அதிகம் பாதிக்கும் வாய், இரைப்பை, மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படவர்கள் அதிகம் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
குறிப்பாக 2014-ம் ஆண்டு முதல் கருப்பை, கருப்பை வாய் புற்று நோய்களுக்கு லேப்பராஸ் கோப்பி முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. துல்லியம், குறைவான ரத்த இழப்பு, தொற்றுக்கான வாய்ப்பு குறைவு, குறைந்த நாட்கள் மருத்துவமனையில் உள்ள காரணங்களுக்கான இந்த முறை அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது. முதல்மைச்சரின் விரிவான காப்பீட் திட்டத்தின் கீழ் இந்த சிகிச்சை வழங்கப்படுகிறது.
இவ்வாறு துல்லியமான சிகிச்சை முறையான லேப்பராஸ் கோப்பி முறை குறைத்து மாணவர்களின் திறனை அதிகப்படுத்த ராய்பேட்டை மருத்துவமனையில் 6 பணி நிலைகளை கொண்ட ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வகம் மூலம் அடிப்படை கருவிகளை கையாளும் பயிற்சி, நிகழ் நேர செயல்முறைகள் மூலம் மாணவர்கள் சிகிச்சை திறன் மேம்படும். இந்த ஆய்வகத்தை மருத்துவமனையின் டீன் சாந்திமலர், மருத்துவ கண்காணிப்பாளர் மணி ஆகியோர் விரைவில் திறந்து வைக்க உள்ளனர்.