தமிழகம்

திருப்பூரில் நள்ளிரவில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.570 கோடியை திரும்ப ஒப்படைப்பதில் தாமதம் ஏன்?

இரா.கார்த்திகேயன்

திருப்பூர் அருகே உரிய ஆவணங் கள் இன்றி 3 கன்டெய்னர் லாரி களில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.570 கோடி பணம் பறிமுதல் செய் யப்பட்ட நிலையில், இன்று (மே 16) நடைபெறும் தேர்தல் காரணமாக, திரும்ப ஒப்படைப்பதில் தாமத மாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் அருகே பெருமாநல் லூர்- குன்னத்தூர் தேசிய நெடுஞ் சாலையின் பாலத்தின் கீழ்பகுதியில் உள்ள இணைப்புச் சாலையில், கடந்த 14-ம் தேதி அதிகாலை நிலை கண்காணிப்புக் குழுவினர் எம்.விஜயகுமார் தலைமையில் வாகனத் தணிக்கை நடந்து கொண்டி ருந்தது. அப்போது, உரிய ஆவணங் கள் இல்லாததால் 3 கன்டெய்னர் லாரிகளில் வைக்கப்பட்டிருந்த ரூ.570 கோடி பறிமுதல் செய்யப் பட்டது. இது தொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, ‘பணத்துக்கு ஆவணங்களின் நகல் மட்டுமே இருந்தன. ஸ்டேட் பாங்க் தலைமை செயல் அதிகாரி பேசியுள்ளார். 3 தேர்தல் பார்வையாளர் தலை மையில் குழு அமைத்து விசாரிக்கப் பட்டு வருவதாக’ தெரிவித்தார்.

5 சிசிடிவி கேமராக்கள்

திருப்பூர் ஆட்சியர் அலுவலகத் தில் நேற்று முன்தினம் மாலை முதல் ஆட்சியர் ச.ஜெயந்தி நிய மித்த சிறப்புக் குழுவினர், விசார ணையில் ஈடுபட்டனர். விசாரணை நேற்று அதிகாலை வரை நீடித்தது. கோவை எஸ்பிஐ தரப்பில் ஆவ ணங்களை சிறப்புக் குழுவினரிடம் சமர்ப்பித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி வைத்ததாகவும், அதை அவர் டெல்லிக்கு அனுப்பி வைத்துள்ள தாகவும் கூறப்படுகிறது.

போலீஸாரும், தற்காலிக தடுப்பு கள் ஏற்படுத்தி 5 சிசிடிவி கேமிராக் களை பொருத்தி இரவு முழுவதும் ஆயுதம் தாங்கிய போலீஸாருடன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

மூன்று கன்டெய்னர்களில் மொத்தம் 195 பெட்டிகள் இருந்துள் ளன. அதில், ரூ. 570 கோடி இருப்ப தாகவும் வங்கித் தரப்பில் கடிதம் தரப்பட்டுள்ளது. விசாகப்பட்டினம் மாநகர காவல் ஆய்வாளர் ஜி.மகாத்மாகாந்தி கோவையிலி ருந்து விசாகபட்டினத்துக்கு பணத்தை கொண்டு செல்வதற்கு பாதுகாப்பு அலுவலராக வந்துள் ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ‘கோவையிலிருந்து பணம் விடு விக்கப்பட்டதற்கான ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் அச்சுப்பிழை ஏற்பட்டுள்ளது. ஆகவே, நிலைக் கண்காணிப்புக் குழுவினர் சந்தேகமடைந்து அழைத்து வந்தனர். தற்போது தமிழகத்தில் தேர்தல் நடப்பதால், வாக்குப்பதிவுக்கு முன்பாக பணத்தை விடுவிக்க முடியாது என அதிகாரிகள் தரப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது’ என்றார்.

கன்டெய்னர் லாரியில் உடன் வந்த எஸ்பிஐ அலுவலர் கே.சூரி ரெட்டி கூறும்போது, ‘கோவை எஸ்பிஐ பெட்டகத்தில் இருந்து, ரிசர்வ் வங்கி உத்தரவுப்படி, விசாகப்பட்டினத்துக்கு கொண்டு செல்வதற்காக ரூ.570 கோடி வழங் கப்பட்டது. இது அங்குள்ள எஸ்பிஐ கிளைகளுக்கு பிரித்து வழங்கப் படும். இந்த நிலையில் பணத்தை கொண்டு செல்லும் வழியில் இச் சம்பவம் நடைபெற்றுள்ளது’ என் றார்.

திருப்பூர் மாநகரப் போலீஸார் கூறியதாவது: மத்திய ரிசர்வ் படை, ஆயுதப்படை போலீஸார் மற்றும் மாநகரக் காவல்துறை அடங்கிய 3 அடுக்கு பாதுகாப்பு போடுவதற்கான பணிகள், திருப்பூர் ஆட்சியர் அலு வலகத்தில் தற்போது நடைபெற்று வருகின்றன என்றனர்.

இதற்கிடையே, கோவை எஸ்பிஐ அலுவலர்கள் திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த 3 கன்டெய்னர் லாரிகளை நேற்று பார்வையிட்டனர்.

ஆட்சியர் ச.ஜெயந்தி உத்தரவுப் படி அமைக்கப்பட்டுள்ள சிறப்புக் குழுவினரிடம், வங்கி அலுவலர்கள் ஒப்படைத்த ஆவணங்கள் சரிபார்க் கப்பட்டு தலைமை தேர்தல் அதி காரிக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப் படுகிறது.

இந்நிலையில், தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் இருந்து கிடைக்கப்பெறும் உத்தரவுக்கு காத்திருப்பதாக சொல்கின்றனர் இங்கு உள்ளவர்கள். இன்று சட்டப் பேரவைத் தேர்தல் நடப்பதால், அதுவரை பணம் வைக்கப்பட்டுள்ள கன்டெய்னர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும். அதன்பிறகு, கோவை வங்கிக்கே இன்னும் ஓரிரு தினங்களில் திருப்பி அனுப்பி வைக்கப்படலாம் என பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார் தெரிவிக்கின்றனர்.

கோவை கொண்டு செல்ல அனுமதி

‘கடைசியாக வந்த தகவல்படி, கன்டெய்னர் லாரிகளை பாதுகாப் பாக கோவைக்கு அனுப்பி வைக் கும்படி வருமானவரித் துறையினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளதாக’ தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி சென்னையில் நேற்று நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT