பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய முள்ளம்பன்றி மீன்கள். 
தமிழகம்

பாம்பன் மீனவர்கள் வலையில் சிக்கிய முள்ளம்பன்றி மீன்கள்

செய்திப்பிரிவு

ராமேசுவரம்: மன்னார் வளைகுடா கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த பாம்பன் நாட்டுப் படகு மீனவர்கள் வலையில் முள்ளம்பன்றி மீன்கள் சிக்கின.

பாம்பன் தென்பகுதியைச் சேர்ந்த நாட்டுப் படகு மீனவர்கள் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நேற்று மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் விரித்த வலையில் 3 முள்ளம்பன்றி மீன்கள் சிக்கின.

இதுகுறித்து மீன்வளத் துறை அதிகாரிகள் கூறியதாவது: பொதுவாக இவை பலூன் மீன்கள் என்று அழைக்கப்படும். மீனவர்கள் இதை பேத்தை மீன்கள் என்று அழைக்கின்றனர்.

இந்த பலூன் மீன்களில் ஒரு வகை முள்ளம்பன்றி மீன்கள் ஆகும். கூர்மையான முட்கள் கொண்ட உருண்டை வடிவத்தில் பார்ப்பதற்கு முள்ளம்பன்றி போல் இருப்பதால் இதற்கு இந்த பெயர் ஏற்பட்டது. தன்னை தாக்க வரும் மற்ற மீன்களிடமிருந்து காத்துக் கொள்ள இந்த முட்களை இவை பயன்படுத்துகின்றன.

வலையில் அரிதாக சிக்கும் முள்ளம் பன்றி மீன்களை மீண்டும் கடலிலேயே மீனவர்கள் தூக்கி எறிந்து விடுவார்கள் என்று கூறினார்.

SCROLL FOR NEXT