கோவை, திருப்பூர் மாவட்டங்களில் குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றும் திட்டத்தின் மூலம் மீட்கப் பட்டு பள்ளியில் சேர்க்கப்பட்ட 11 பேர் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற் றுள்ளனர்.
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை அமைச்சகத்தின் நிதியுதவியுடன் 9-14 வயதுள்ள குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப் படுகின்றனர். பின்னர் அவர்கள் சிறப்புப் பயிற்சி மையங்களில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் கல்வி கற்றபின் முறை சார்ந்த பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர். அதன் பிறகு அவர்கள் தங்கள் கல்வியைத் தொடர்கின்றனர்.
அந்த வகையில், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் குழந்தைத் தொழிலாளர்களாக மீட்கப்பட்டு பின்னர் படிப்பைத் தொடர்ந்த 13 பேர் இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதினர். நேற்று வெளியான தேர்வு முடிவில், 11 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் குறிப்பாக பொள்ளாச்சி நாச்சிமுத்துக்கவுண்டர் பழனியம் மாள் மேல்நிலைப் பள்ளியில் படித்த எம்.தேவி 987 மதிப்பெண், ஜி.சபரி 967 மதிப்பெண், எம்.விஷ்ணுபிரபு 956 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
தேசிய குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றும் திட்ட இயக்குநர் விஜயகுமார் கூறும்போது, ‘சிறப்பான தேர்ச்சி பெற்ற மாண வர்களுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் 11 பேரின் உயர்கல்விக்காக தமிழக அரசு மூலம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் ஊக்கத்தொகை பெற்றுத்தர மாநில தொழிலாளர் ஆணையருக்கு மாவட்ட ஆட்சியர் முன்மொழிவு அனுப்ப உள்ளார்’ என்றார்.