நாடு முழுவதும் கல்வியில் சமமான சூழல் ஏற்பட்ட பிறகுதான் மருத்துவ பொது நுழைவுத் தேர்வை நடத்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவி களுக்கு வாழ்த்துகளை தெரிவித் துக்கொள்கிறேன். தேர்வில் வெற்றி பெற முடியாதவர்கள் சஞ்சலப்பட வேண்டாம். துணைத் தேர்வுகளில் நிச்சயம் வெற்றி பெற்றுவிடலாம். மேலும், மருத்துவக் கல்லூரியில் சேரும் கனவில் உள்ள மாணவர்கள் பொது நுழைவுத் தேர்வை நினைத்து கவலைப்பட வேண் டாம். தமிழக மாணவர்களின் பிரச்சினையை உணர முடிந்த காரணத்தால்தான், தமிழகத்தில் கல்வியில் ஒரு சமநிலை கிடைத்த பிறகே பொது நுழைவுத் தேர்வு வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியுள்ளோம்.
ஒவ்வொரு மாநிலத்தின் கல்விச் சூழலை உணர்ந்து அதற்கேற்ப தேர்வுகளை நடத்த வேண்டும். எனவே, தமிழகத்தில் ஏற்கெனவே இருக்கும் கல்விச் சூழல் அப்ப டியே இருக்க வேண்டும். இல்லை யெனில் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசிடம் கூறியுள்ளோம்.
அதன்பேரில் உச்ச நீதிமன் றத்தை மத்திய அரசு அணுகி யுள்ளது. மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களின் கருத்தையும் கேட்டுள்ளது. பாஜகவை பொறுத்தவரை அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதே எங்களின் எண்ணம். கிராமப்புற மாணவர்கள் சமமான வாய்ப்புகளை பெறு வதற்கு பாஜக என்றுமே துணை நிற்கும்.
இவ்வாறு தமிழிசை சவுந்தர ராஜன் கூறியுள்ளார்.