தமிழகம்

கிணற்றில் தவறி விழுந்த ஸ்ரீரங்கம் நாராயண ஜீயர் நலமுடன் உள்ளார்: பக்தர்கள் கவலைப்பட வேண்டாம் என வேண்டுகோள்

செய்திப்பிரிவு

கிணற்றுக்குள் தவறி விழுந்ததால் காயமடைந்த ஸ்ரீரங்கம் நாராயண ஜீயர் தற்போது நலமுடன் இருப்பதாகவும், பக்தர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம் எனவும் அவரது மகன் திருமலை அறிவித் துள்ளார்.

பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்க நாதர் கோயிலின் நிர்வாகத்தை நெறிப்படுத்தி, தினசரி வழிபாட்டு முறைகளை வகுத்துக் கொடுத்த வர் ஸ்ரீராமானுஜர். வடக்கு கோபு ரத்தின் அருகில் தங்கியிருந்து இவர் சேவை செய்த மடம் இன்றள வும் செயல்பட்டு வருகிறது.

ஸ்ரீரங்கம் கோயில் ஜீயர் மடம் என அழைக்கப்படும் இந்த மடத்தின் 50-வது பட்டத்து ஜீயராக ஸ்ரீரங்க நாராயண ஜீயர் உள்ளார். 90 வயதாகும் இவருக்கு சொர்க்கவாசல் திறப்பு உட்பட கோயிலின் அனைத்து முக்கிய வழிபாடுகள் மற்றும் நிர்வாகத்தில் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை, மடத்தில் உள்ள நீரில் லாத கிணற்றுக்குள் ஸ்ரீரங்க நாராயண ஜீயர் தவறி விழுந்தார். தகவலறிந்த தீயணைப்பு துறை யினர் விரைந்து வந்து கிணற் றுக்குள் இருந்து ஜீயரை மீட்டனர்.

கை, முகம், இடுப்பு உள்ளிட்ட பகுதிகளில் லேசான காயம் ஏற் பட்டதால் உடனடியாக ஆம்பு லன்ஸ் மூலம் திருச்சி அப்பலோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் நலமுடன் இருப்ப தாக தகவல்கள் வெளியாகியுள் ளன.

இதுகுறித்து ஸ்ரீரங்க நாராயண ஜீயரின் மகன் திருமலை ‘தி இந்து’ விடம் கூறியது:

ஸ்ரீரங்க நாராயண ஜீயர் பொறுப்புக்கு வந்து 28 ஆண்டு கள் ஆகிவிட்டன. ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகப் பணிகள் மட்டு மின்றி, உலக நன்மைக்கான பல் வேறு இடங்களில் 7 முறை 108 யாகங்களை நடத்தியுள்ளார். தற்போது ஸ்ரீராமானுஜரின் 1000-வது ஆண்டு விழா நடை பெறுவதால், அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 15 நாட்களாக தூக்கமின்றித் தவித்து வந்தார். இரவு, பகல் என எந்த நேரத்திலும் அவரால் தூங்க முடிய வில்லை. இதற்காக மருத்துவர் களிடம் சிகிச்சைபெற்று வந் தோம்.

இந்த சூழலில், கடந்த 23-ம் தேதி மாலை மடத்துக்குள் சந்தியாவந்தனம் செய்துகொண்டி ருந்தார். அப்போது பின்னால் இருந்த கிணற்றின் தடுப்புச் சுவரில் சாய்ந்தபோது, எதிர்பாராமல் தடுமாறி உள்ளே விழுந்தார்.

கிணற்றின் அகலம் குறை வாக இருந்ததாலும், குடிநீருக் கான குழாய்கள் இடையில் இருந் ததாலும் சுமார் 18 அடி ஆழத்தில் அவர் சிக்கிக் கொண்டார். இதைக் கண்ட சீடர்களும், பக்தர்களும் அவரைக் காப்பாற்ற முயன்றோம். அதில் சிரமம் ஏற்பட்டதால் தீய ணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தோம். அவர்கள் உடனடி யாக வந்து ஜீயரை காப்பாற்றினர்.

கை, முகத்தில் லேசான சிராய்ப்புக் காயங்கள் இருந்தன. முதுகு பகுதியிலும் லேசான வலி இருந்ததால் மருத்துவமனையில் சேர்த்தோம். இங்கு தற்போது நலமுடன் உள்ளார். டிஸ்சார்ஜ் செய்து மடத்துக்கு அழைத்துச் செல்லுமாறு ஜீயர் கூறினார். ஆனால், 4 நாட்களுக்கு முழு ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் இன்னும் மருத்துவமனையில் தங்க வைத்துள்ளோம். ஜீயர் நலமுடன் இருப்பதால் பக்தர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். விரைவில் மீண்டும் மடத்துக்கு வந்து தனது வழக்கமான பணி களை மேற்கொள்வார் என்றார்.

SCROLL FOR NEXT