தமிழகம்

செங்கம் அருகே 3 முதியவர்கள் தற்கொலைக்கு முயற்சி: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: செங்கம் அருகே உடல்நிலை பாதிப்பு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 முதியவர்கள் தற்கொலைக்கு முயன்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த வெங்கடேசபுரத்தில் வசிப்பவர் ராமசாமி (80). இவரது மனைவி பாப்பா(75). ராமசாமியின் அண்ணன் சுப்ரமணியின் மனைவி ஜக்கம்மா(78). இவர்கள் மூவரும், அதே பகுதியில் வசிக்கும் மகன் சேகருடன் வசித்து வருகின்றனர்.

வறுமை மற்றும் உடல்நிலை பாதிப்பு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் வேதனையடைந்த 3 பேரும் நேற்று முன்தினம் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

அப்போது மயங்கி விழுந்த மூவரையும், சேகர் உள்ளிட்டவர்கள் மீட்டு செங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், உயர் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து செங்கம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT