தமிழகம்

சென்னை - சைதாப்பேட்டை அரசு மருத்துவனை கிணற்றில் காலாவதியான மாத்திரைகள்

கண்ணன் ஜீவானந்தம்

சென்னை: சென்னை - சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் காலாவதியான மாத்திரைகள் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை - சைதாப்பேட்டை கருணாநிதி நினைவு வளைவு அருகில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் மகப்பேறு சிறப்பு பிரிவு உள்ளிட்ட பல பிரிவுகள் செயல்பட்டு வருகிறது.

இந்த மருத்துவமனையில் கிணறு ஒன்று உள்ளது. இந்நிலையில், இந்த கிணற்றில் மாத்திரைகள் கொட்டப்பட்டுள்ளதை பார்த்து சிகிச்சை பெற வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது தொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சுகாதாரத் துறை அதிகாரிகள் இன்று காலை அங்கு வந்து மருந்துகளை வெளியே எடுத்து ஆய்வு செய்தனர்.

ஆய்வில், அந்த மருந்துகள், மாத்திரைகள் அனைத்தும் காலாவதியானவை என்று தெரியவந்தது. மேலும், மருத்துவமனை நிர்வாகமே காலாவதியான மருந்துகளை கிணற்றில் கொட்டியதும் தெரியவந்துள்ளது.

SCROLL FOR NEXT