தமிழகம்

அக்னி பாதை திட்டம் மூலம் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்பு: ஹெச்.ராஜா பேட்டி

செய்திப்பிரிவு

சிங்கம்புணரி: அக்னி பாதை திட்டம் மூலம் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்பு கள் வழங்கப்பட்டுள்ளன என பாஜக மூத்த நிர்வாகி ஹெச்.ராஜா தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் சிங்கம் புணரி அருகே காளாப்பூர் பகுதி யில் கொக்கன் கருப்பர் கோயில் இடத்தில் புதிய நீதிமன்றம் கட்டு வதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அங்கு சென்ற ஹெச்.ராஜா மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.

பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது: ஐந்து கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கொக்கன் கருப்பன் கோயிலில் வழிபாடு நடத்தி வருகின்றனர். கோயில் இடத்தில் அரசு கட்டிடம் கட்டுவது மத உரிமையை தடுக்கும் செயல். ராணு வத்தில் சேர்வதற்கு ஏற்கெனவே உள்ள எந்த வாய்ப்பையும் தடுக்க வில்லை. அக்னி பாதை திட்டம் மூலம் இளைஞர் களுக்கு புதிய வாய்ப்புகள் வழங்கப் பட்டுள்ளன என்றார்.

தொடர்ந்து திருநாவுக்கரசர் எம்பி ஆளு நரை விமர்சனம் செய்தது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, ஹெச்.ராஜா பதிலளிக்கையில், ஆளுநர் ஆன்மிகம் பேச வேண்டிய இடத்தில்தான் பேசி யுள்ளார். அரசியல் தலைவர்கள் சனாதன தர்மத்தை படிக்க வேண்டும்.

வேத நாகரிகம் அல்லது சனாதன தர்மம் என்பது 15,000 ஆண்டுகள் பழமையானது என ஆராய்ச்சியாளர்கள் கூறி யுள்ளனர். வேதங்கள் பிறந்தது தமிழகத்தில்தான் என்றார்.

SCROLL FOR NEXT