தனபால் | கோப்புப் படம் 
தமிழகம்

தமிழக சட்டப்பேரவை முன்னாள் தலைவர் தனபாலுக்கு கரோனா உறுதி

ஆர்.கார்த்திகேயன்

திருப்பூர்: அவிநாசி சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவருமான ப.தனபாலுக்கு கரோனா தொற்று உறுதியானது.

இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில், ''எனக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பு இருந்து வந்தது. இதைத்தொடர்ந்து மருத்துவ பரிசோதனை செய்ததில், கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தற்போது மருத்துவர்கள் ஆலோசனைப்படி, வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறேன். அனைவரும் முகக்கவசம் அணிந்து உரிய பாதுகாப்புடன் இருக்க வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவரது தரப்பில் பேசியபோது, ''கரோனா தொற்று உறுதியான நிலையில் சென்னையில் உள்ள அவரது வீட்டில் சிகிச்சை தனிமைப்படுத்திக்கொண்டார். வீட்டில் மற்றவர்களுக்கு தொற்று இல்லை. அனைவரும் நலமுடன் உள்ளனர்'' என்றனர்.

SCROLL FOR NEXT