தமிழகம்

சசிபெருமாள் இறந்ததும் மதுவிலக்கை அமல்படுத்தாது ஏன்?- ஜெயலலிதாவுக்கு கனிமொழி கேள்வி

செய்திப்பிரிவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் திமுக, காங்கிரஸ் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று கனிமொழி எம்.பி. பிரச்சாரம் மேற்கொண்டார். தெங்கம்புதூரில் கன்னியாகுமரி திமுக வேட்பாளர் ஆஸ்டினை ஆதரித்து அவர் பேசியதாவது:

கருணாநிதி ஆட்சிக்கு வந்ததும் கடந்த முறை ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய், விவசாயக் கடன் தள்ளுபடி ஆகியவற்றுக்குத் தான் முதல் கையெழுத்து போட்டார். கருணாநிதி சொன்னதை செய்வார் என்பதற்கு அதுவே சாட்சி. திமுகவின் தேர்தல் அறிக்கையில் தனது கட்சி ஸ்டிக்கரை ஒட்டி, அதிமுக வெளியிட்டுள்ளது.

5 ஆண்டுகளாக முதியோர் உதவித் தொகை கூட சரியாக வழங்கப்படவில்லை. அதி முக ஆட்சியில் மூன்று முறை மின்கட்டணம் உயர்த் தப் பட்டுள்ளது. ஏற்கெனவே மின் வாரியம் நஷ்டத்தில் இயங்கி வரும் நிலையில் 100 யூனிட் வரை மின்சாரம் இலவசம் என்று அறிவி்த்திருப்பதை மக்கள் நம்பத் தயாராக இல்லை.

மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என ஜெயலலிதா நினைத்திருந்தால், சசிபெருமாள் இறப்பின் போதே அதை செய்திருப்பார். இப்போது கூட மதுவுக்கு எதிராக போரா டியவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குடும்ப அட்டை உள்ள அனை வருக்கும் செல்பேசி வழங்குவதாக அறிவித்துள்ளனர். குடும்ப அட்டையைக் கூட முறையாக வழங்க இயலாதவர்கள் செல்பேசி வழங்குவதாக அறிவித்திருப்பது ஏற்புடையதாக இல்லை. பாஜக இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவதாக சொல்லி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டது. ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும், அது கிடைத்ததா? திமுக ஆட்சி அமைந்ததும் 10 ஆயிரம் கோடியில் நீர் நிலைகள் தூர்வாரப்படும். குமரி மாவட்டத்தில் ஏ.வி.எம். கால்வாய் தூர்வாரப்பட்டு, நீர் வழிப் போக்குவரத்து மேற்கொள்ளப்படும்’ என்றார்

SCROLL FOR NEXT