சென்னை அடுத்த ஆவடி பூம்பொழில் நகரை சேர்ந்தவர் கார்த்திக் (28). பிரபல ரவுடியான இவர், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் ஓட்டேரியில் குடியிருந்தபோது ஒருவரை கொலை செய்ததாக சொல்லப்படுகிறது. அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
மர்ம கும்பல் சுற்றிவளைப்பு
இந்நிலையில், ஓட்டேரியில் சன்னியாசி தெருவில் உள்ள நண்பரை பார்க்க நேற்று காலை 11.30 மணிக்கு வந்துள்ளார். அப்போது பைக்கில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் கார்த்திக்கை சுற்றி வளைத்தனர்.
தப்பி ஓடிய கார்த்திக்கை, அவர்கள் விரட்டிச் சென்றனர். அங்குள்ள அடுக்குமாடி குடியிருப் பின் 4-வது மாடிக்குச் சென்ற கார்த்திக்கை அரிவாள்களால் சரமாரியாக வெட்டினர்.
தலை மற்றும் கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் பலத்த வெட்டுக் காயம் அடைந்த கார்த்திக் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். இதை யடுத்து, மர்ம கும்பல் அங்கி ருந்து தப்பிச் சென்றது. இதனைப் பார்த்த அடுக்குமாடி குடியிருப் பில் வசிப்பவர்கள் உடனடியாக போலீஸாருக்கு தகவல் கொடுத்த னர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அயனாவரம் போலீஸார், ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த கார்த் திக்கை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட கார்த்திக், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுபற்றி போலீஸார் வழக்குப் பதிவு செய்து 4 பேர் கொண்ட மர்ம கும்பலைத் தேடி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் பழிக்கு பழி வாங்க எதிரிகள் வெட்டியிருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தால், அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.