தமிழகம்

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனைத்து தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு: சென்னையில் இன்று 39 லட்சம் பேர் வாக்களிக்கின்றனர்

செய்திப்பிரிவு

சென்னை மாவட்டத்தில் வாக்குப் பதிவை ஒட்டி, அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலம், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப் பதிவு இயந்திரங்கள் நேற்று வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

சென்னை மாவட்டத்தில் 16 தொகுதிகள் உள்ளன. மொத்தம் 378 வேட்பாளர்கள் போட்டியிடு கின்றனர். அதிகபட்சமாக ஆர். கே.நகர் தொகுதியில் 45 வேட் பாளர்கள் போட்டியிடுகின்றனர். முதல்வர் ஜெயலலிதா ஆர். கே.நகர் தொகுதியிலும், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலும் போட் டியிடுகின்றனர்.

39 லட்சம் வாக்காளர்கள்

இந்த தேர்தலில் 19 லட்சத்து 66 ஆயிரத்து 885 ஆண் வாக்காளர்கள், 20 லட்சத்து 7 ஆயிரத்து 198 பெண் வாக்காளர் கள், 945 இதரர், ராணுவத்தில் பணிபுரியும் 996 வாக்காளர்கள் என மொத்தம் 39 லட்சத்து 76 ஆயிரத்து 24 வாக்காளர்கள் வாக் களிக்க உள்ளனர்.

வாக்காளர் சீட்டு

மாவட்டம் முழுவதும் கடந்த 5-ம் தேதி முதல் வீடு வீடாகச் சென்று வாக்காளர் சீட்டுகளை விநியோகிக்கும் பணி மேற்கொள் ளப்பட்டது. இப்பணி கடந்த 11-ம் தேதியுடன் முடிவடைந்தது. அன்றுவரை 80 சதவீதம் பேருக்கு விநியோகிக்கப்பட்டது.

406 மையங்கள் பதற்றமானவை

இம்மாவட்டத்தில் 891 அமை விடங்களில் மொத்தம் 3 ஆயிரத்து 771 வாக்குச் சாவடிகள் உள்ளன. அவற்றில் 406 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டி ருப்பதுடன், நுண் பார்வையாளர் களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கேமரா கண்காணிப்பு

தேர்தல் விதிமீறல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக 2 ஆயிரத்து 831 வாக்குச் சாவடிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அந்த வாக்குச் சாவடிகளில் கண்காணிப்பு கேம ராக்கள் பொருத்தப்பட்டு, தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்க ஏற்பாடுகள் செய் யப்பட்டுள்ளன.

யாருக்கு வாக்களித்தோம்

இந்த தேர்தலில் 9 ஆயிரத்து 304 வாக்குப் பதிவு இயந்திரங்கள் 4 ஆயிரத்து 361 கட்டுப் பாட்டு இயந்திரங்கள் பயன்ப டுத்தப்பட உள்ளன. சோதனை அடிப்படையில் அண்ணாநகர் தொகுதியில் உள்ள 251 வாக்குச் சாவடிகளில், யாருக்கு வாக்களித் தோம் என்பதை தெரிவிக்கும் கருவி சோதனை அடிப்படையில் பயன்படுத்தப்படுகிறது. வாக்குப் பதிவு இயந்திரங்கள் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாகனங் கள் மூலமாக வாக்குச் சாவடிக ளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அப்பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் பி.சந்தரமோகன் நேற்று ஆய்வு செய்தார்.

சிறப்பு வாக்குச்சாவடிகள்

வில்லிவாக்கம் தொகுதியில், அம்மன் குட்டை பகுதியில் மாற்றுத் திறனாளிகளுக்கென தனி வாக்குச் சாவடியும், ஆர்.கே.ந கர் தொகுதியில், இரட்டை குழி எனும் இடத்தில் பார்வையற்றோ ருக்கான சிறப்பு வாக்குச் சாவடியும், அமைக்கப்பட்டுள்ளன. மேலும் ஒவ்வொரு தொகுதியிலும் 4 மாதிரி வாக்குச் சாவடிகளும், ஒரு அனைத்து மகளிர் வாக்குச் சாவடியும் அமைக்கப்பட்டுள்ளன.

20 ஆயிரம் பணியாளர்கள்

வாக்குச் சாவடிகளில் 15 ஆயி ரத்து 567 மாநில அரசு அலுவலர் கள், 4 ஆயிரத்து 489 மத்திய அரசு அலுவலர்கள் என மொத்தம் 20 ஆயிரத்து 56 பணியாளர்கள் ஈடுப டுத்தப்படுகின்றனர். இவர்களுக்கு இறுதிக்கட்ட பயிற்சிகள், அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலம் நேற்று நடத்தப்பட்டு, பணி ஆணை வழங்கப்பட்டது. பின்னர் அவரவருக்கு ஒதுக்கப் பட்ட வாக்குச் சாவடிகளுக்கு வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். பணியாளர்க ளுக்கு வசதியாக அங்கு மருத் துவ முகாமும் நடத்தப்பட்டன.

சக்கர நாற்காலிகள்

அனைத்து வாக்குச் சாவடி களிலும் மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர் எளிதில் வந்து செல்வதற்காக, சாய்தள வசதி செய்யப்பட்டுள்ளது. அதற்காக ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் சக்கர நாற்காலிகளும் வழங்கப் பட்டுள்ளன.

7 ஆயிரம் போலீஸார்

தேர்தல் பாதுகாப்பு பணியில் 6 ஆயிரத்து 916 போலீஸாரும், 672 துணை ராணுவப் படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர வருக்கான வாக்குச் சாவடிகள் ஒதுக்கப்பட்டு, வாகனங்கள் மூலம் அங்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

SCROLL FOR NEXT