முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான இறுதி விசாரணை அறிக்கையை ஆகஸ்ட் 3-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக தமிழக அரசு உத்தரவின்படி நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் கடந்த 2017-ம் ஆண்டுசெப்டம்பர் மாதம் முதல் விசாரித்துவந்தது. இந்த ஆணையம் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, முன்னாள் சுகாதாரத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் உள்ளிட்ட 159 பேரிடம் விசாரணை மேற்கொண்டு, தனதுவிசாரணையை கடந்த ஏப்ரல்மாதத்துடன் முடித்துக் கொண்டது.
தற்போது அரசுக்கு சமர்ப்பிப்பதற்காக இறுதி அறிக்கையைதயாரிக்கும் பணிகளை நீதிபதிஆறுமுகசாமி மேற்கொண்டு வருகிறார். எய்ம்ஸ் மருத்துவர்கள் குழுவின் அறிக்கையை பெற்று, விசாரணை அறிக்கையுடன் இணைக்க வேண்டியுள்ளது.
இந்தநிலையில் 12-வது முறையாக ஆணையத்துக்கு கொடுக்கப்பட்ட கால அவகாசம் ஜூன் 24-ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில் மேலும் அவகாசம் கோரிஆணையம் அரசிடம் கோரி இருந்தது. 13-வது முறையாக அவகாசத்தை நீட்டித்து, ஆக.3-ம் தேதிக்குள் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.