தமிழகம்

தென்காசியில் ஒரு சாவடியில் இன்று மறு வாக்குப்பதிவு

செய்திப்பிரிவு

மாதிரி வாக்குகள் அழிக்கப்படாததால், தென்காசி தொகுதியில் 56-வது வாக்குச்சாவடியில் மட்டும்18ம் தேதி மறு வாக்குப்பதிவு நடத்த, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 232 தொகுதிகளில் நேற்று முன்தினம் 16-ம் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. மின்னணு இயந்திரங்கள், வாக்கு எண்ணிக்கை மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று, வாக்குப்பதிவு தொடர்பான படிவம் 17 சி உள்ளிட்ட ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன.

அப்போது, நெல்லை மாவட்டம் தென்காசி தொகுதியில் உள்ள 56 வது எண் வாக்குச்சாவடி யில், பதிவான வாக்குகள் தொடர்பாக குழப்பம் ஏற்பட்டது. ஆவணங்கள் படி மொத்தமாக இருந்த 972 வாக்காளர்களில், 644 பேர் வாக்குகளை செலுத்தியிருந்தனர். 52 மாதிரி வாக்குகள் பதியப்பட்டிருந்தன. இந்த மாதிரி வாக்குகள் அழிக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த சாவடியில் இன்று மறு வாக்குப்பதிவு நடக்கிறது.

SCROLL FOR NEXT