தமிழகம்

திருச்சி - ஈரோடு - திருச்சி இடையே ஜூலை 9 முதல் முன்பதிவில்லா சிறப்பு ரயில் சேவை

செய்திப்பிரிவு

தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட பகுதிகளில் கரோனா பரவலால் பயணிகள் மற்றும் விரைவு ரயில்களின் சேவை நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ரயில் சேவை இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.

மேலும், பயணிகளின் கோரிக்கையை ஏற்று, பல்வேறு ரயில்நிலையங்களுக்கு இடையே இயக்கப்பட்ட முன்பதிவில்லா பயணிகள் ரயில்களை, சிறப்பு ரயில்களாக இயக்க ரயில்வே வாரியம் அனுமதி வழங்கி வருகிறது.

அந்த வகையில், திருச்சி- ஈரோடு இடையே நிறுத்தப்பட்டிருந்த பயணிகள் ரயில் ஜூலை 9-ம் தேதி முதல் முன்பதிவில்லா சிறப்பு விரைவு ரயிலாக இயக்கப்பட உள்ளது. அதன்படி, ஈரோட்டில் இருந்து (வண்டி எண்- 06410) காலை 8.10 மணிக்கு புறப்பட்டு, நண்பகல் 12 மணிக்கு திருச்சியை வந்தடைகிறது.

மறுவழித்தடத்தில், திருச்சியில் இருந்து (வண்டி எண்- 06409) மாலை 4.30 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் அன்றைய தினம் இரவு 8 மணிக்கு ஈரோடு சென்றடைகிறது.

மற்றொரு ரயில் சேவையாக திருச்சியில் இருந்து (வண்டி எண்- 06611) காலை 6.50 மணிக்கு புறப்பட்டு, முற்பகல் 11.10 மணிக்கு ஈரோடு சென்றடைகிறது. மறுவழித்தடத்தில் ஈரோட்டில் இருந்து(வண்டி எண்- 06612) மாலை 4.35 மணிக்கு புறப்பட்டு, இரவு 8.45 மணிக்கு திருச்சி வந்தடைகிறது என திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT