தமிழகம்

சைனா போனைக் கொடுத்து ஏமாற்றப் பார்க்கிறார்கள்: குஷ்பு விமர்சனம்

செய்திப்பிரிவு

ரூ.350 மதிப்புள்ள சைனா செல் போனை இலவசமாகக் கொடுத்து மக்களை ஏமாற்றப் பார்க்கின்றனர் என காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளர் குஷ்பு அதிமுக தேர்தல் அறிக்கையை விமர்சித் துள்ளார்.

கோவையில் நடைபெற்ற திமுக கூட்டணி பிரச்சாரப் பொதுக் கூட்டத்துக்கு வந்த குஷ்பு, விமான நிலையத்தில் செய்தியாளர் களிடம் கூறியதாவது:

அதிமுக வெளியிட்டுள்ள தேர் தல் அறிக்கை, மிகப்பெரிய ‘ஜோக்’ மாதிரி இருக்கிறது. மக்க ளுக்கு இலவசங்களைக் கொடுத்து ஏமாற்றுவது போல அந்த அறிக்கை உள்ளது. 5 ஆண்டு களாக ஜெயலலிதா தூங்கி விட்டு, இப்போதுதான் விழித்துக் கொண்டதுபோல தெரிகிறது. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டுமென அவர் நினைத் திருந்தால், முதல்வராக பொறுப் பேற்றவுடனே செய்திருக்கலாம். ஆனால், அதையெல்லாம் செய் யாமல் தேர்தல் சமயத்தில் இலவ சங்கள் என்ற வாக்குறுதியைக் கொடுத்து அனைவரையும் கவர்ந்துவிடலாம் என நினைக் கிறார். திமுக, காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் மக்களின் நலனுக் கான திட்டங்களுக்கு முக்கியத் துவம் கொடுக்கப்பட்டுள்ளன. மக்களை ஏமாற்றும் திட்டங்கள் அவற்றில் இல்லை. கருத்துக் கணிப்புகளில் திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு வெற்றி அமோகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதனால், ஜெயலலிதாவுக்கும், அதிமுகவினருக்கும் தோல்வி பயம் வந்துவிட்டது.

அனைவருக்கும் செல்போன் வழங்குவதாக அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. ரூ.350-க்கு ஒரு சைனா செல்போனை வாங்கிக் கொடுத்து ஏமாற்றப் பார்க்கிறார்கள்.

SCROLL FOR NEXT