காந்தி நகரில் மூடப்படாமல் உள்ள ஆழ்துளைக் கிணறு. 
தமிழகம்

காரைக்குடி அருகே ஆபத்தான ஆழ்துளை கிணறு: முறையாக நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் அலட்சியம்

செய்திப்பிரிவு

காரைக்குடி: ஆழ்துளைக் கிணற்றில் குழந்தைகள் தவறி விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகின்றன. இதையடுத்து பயன்பாடில்லாத ஆழ்துளைக் கிணறுகளை மூடிவிட அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், காரைக்குடி அருகே பெரியகோட்டை ஊராட்சி காந்திநகர் கிராமத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ஒன்றரை மாதங்களுக்கு முன்பு ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டது. ஆனால் தண்ணீர் வரவில்லை என்று கூறி, குழாய்கள் பதிக்காமல் அப்படியே விட்டு விட்டனர்.

தற்போது ஆழ்துளைக் கிணறு மூடப்படாமல் பாதுகாப்பின்றி உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள், ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

ஆபத்தான முறையில் உள்ள ஆழ்துளைக் கிணற்றை மூட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

SCROLL FOR NEXT