சிவகங்கை மாவட்டம், கீழடியில் இந்திய தொல்பொருள் துறையின் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச் சியில் சுமார் 2,300 ஆண்டுகளுக்கு முந்தைய சங்க காலத் தமிழர்கள் பயன்படுத்திய தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட 18 மட்பாண்ட ஓடுகள் கிடைத்துள்ளன. மேலும் வெளிநாடுகளுடன் பண்ட மாற்று இருந்ததற்கான ஆதாரங் களும் கிடைத்துள்ளன.
இந்திய தொல்பொருள் துறை யின் பெங்களூரு மத்திய தொல் பொருள் அகழ்வாய்வு பிரிவு சார்பில் கண்காணிப்பாளர் கே.அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையில் உதவி தொல்லியலாளர்கள் ராஜேஷ், வீரராகவன், தொல்லியல் துறை மாணவர்கள் கீழடியில் 2-ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் ஈடுபட் டுள்ளனர்.
இது குறித்து தொல்பொருள் துறை கண்காணிப்பாளர் கே. அமர்நாத் ராமகிருஷ்ணா ‘தி இந்து’ விடம் கூறியதாவது:
கீழடியில் நடைபெறம் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சியில் இதுவரை எங்கும் கிடைத்திராத அரிய வகை தொல்பொருட்கள் கிடைத்து வருகின்றன. கடந்த ஆண்டு தந்தத்தால் ஆன தாயக் கட்டை கிடைத்தது. தற்போது தந்தத்தாலான காதணிகள் கிடைத் துள்ளன.
அதேபோல சுடுமண் காதணி களும் கிடைத்துள்ளன. வெளிநாட் டோடு வாணிபத் தொடர்பு இருந்த தற்கான ஆதாரங்களும் கிடைத் துள்ளன. பலுசிஸ்தானில் கிடைக் கும் சால்சிடோனி, கார்னீலியன், அகேட் போன்ற அரிய வகை மணிகள், அணிகலன்கள் கீழடியில் கிடைத்துள்ளன.
வெளிநாடுகளில் இருந்து பண்ட மாற்று முறையில் அந்த அணி கலன்கள் இங்கு வந்திருக்கலாம். வசதி படைத்தவர்கள் வெளிநாடு களில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட காதணிகளையும், வசதி குறைவாக உள்ளவர்கள் சுடுமண் காதணிகளையும் பயன் படுத்தியுள்ளனர்.
மேலும், தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட 18 மட்பாண்ட ஓடுகள் கிடைத்துள்ளன. இதில் சேந்தன்அவதி, மடைசி, வணிக பெரு மூவர் உண்கலம், சந்தன், எரவாதன், சாத்தன் போன்ற பெயர்கள் கொண்ட எழுத்துக்கள் உள்ளன. இதன் மூலம் மதுரையை ஒட்டிய பெருநகரமாக கீழடி இருந்தது தெரிய வந்துள்ளது. இவையெல்லாம் சங்கக்காலத்தை குறிப்பிடும் முக்கிய ஆதாரங்கள் என்றார்.