தமிழகம்

வாரந்தோறும் கிளைக் கழக கூட்டம் நடத்த மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவு: ரசிகர் மன்ற பாணிக்கு திரும்பும் விஜயகாந்த்

செய்திப்பிரிவு

தேமுதிக உயிர்ப்புடன் இருக்க வாரந்தோறும் கிளைக் கழக கூட்டம் நடத்த வேண்டுமென மாவட் டச் செயலாளர்களுக்கு விஜயகாந்த் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக படுதோல்வியை சந்தித் துள்ளது. இதனால், தேமுதிகவினர் சோர்வடைந்துள்ளனர். கட்சி உயிர்ப்புடன் இருக்க ரசிகர் மன்றமாக இருக்கும்போது கட்சியை வலுப்படுத்த மேற் கொண்ட நடவடிக்கையைப் போல் மீண்டும் களமிறங்க விஜயகாந்த் முடிவு செய்துள்ளார். இந்நிலையில், மாவட்டச் செயலாளர்களுடன் அடிக்கடி ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளார்.

செயலாளர்களுடன் ஆலோசனை

நேற்று குறிப்பிட்ட சில மாவட் டங்களின் செயலாளர்களுடன் கோயம்பேட்டில் ஆலோசனை நடத்தினார். தோல்விக்கான கார ணங்கள், தொகுதி மக்களின் கருத்துகளையும் கேட்டறிந்தார். அடுத்த 2 நாட்களுக்கு மாவட்டச் செயலாளர்களுடன் விஜயகாந்த் ஆலோசனை நடத்த உள்ளார்.

இது தொடர்பாக தேமுதிக நிர்வாகிகளிடம் கேட்டபோது, ‘‘தேமுதிகவை பலப்படுத்த அதிக அளவில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.

மேலும், வாரந்தோறும் கிளைகளில் கூட்டம் நடத்த வேண்டும். அந்தந்த தொகுதிகளில் உள்ள பிரச்சினைகளை சுட்டிக் காட்ட வேண்டும். தேவைப்பட்டால் தொண்டர்களை திரட்டி போராட் டங்கள் நடத்த வேண்டும் என விஜயகாந்த் அறிவுறுத்தியுள்ளார்’’ என்றனர்.

SCROLL FOR NEXT