தமிழகம்

ம.ந.கூட்டணி 150 இடங்களை கைப்பற்றும்: கொட்டும் மழையில் வைகோ பிரச்சாரம்

செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை தொகுதி மதிமுக வேட்பாளர் நிஜாமை ஆதரித்து நேற்று மாலை 5 மணியளவில் ஜவஹர் திட லில் நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வைகோவும், மக்கள் நலக் கூட்டணி, தேமுதிக, தமாகா நிர் வாகிகளும் வந்தனர். அப்போது திடீரென்று இடி, மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டியது. மழை காரணமாக கூட்டணி கட்சி நிர்வாகிகள் யாரும் மேடையில் பேசாமல் வைகோவுக்கு வாய்ப்பளித்தனர்.

கனமழையில் நனைந்து கொண்டே பிரச்சாரத்தை நிறைவு செய்து வைகோ பேசியதாவது:

தமிழகத்தில் பணநாயகம் ஒழிந்து ஜனநாயகம் தழைக்க தேமுதிக, தமாகா, மக்கள் நலக் கூட்டணியை மக்கள் ஆத ரிக்க வேண்டும். குறிப்பாக இளைஞர்கள் எங்களுக்கு ஆதரவு அளித்தால் தமிழகத்தில் முதன்முறையாக கூட்டணி ஆட்சி அமையும். ஊழல் ஒழிக்கப்படும். விஜயகாந்த் தலைமையில் நல்லாட்சி அமையும்.

இம்முறை ஜனநாயகத்தை காப்பாற்ற எங்கள் அணிக்கு வாக்களிக்க தவறினால் இனி எப்போதும் தமிழகத்தில் ஜனநாயகத்தை காப்பாற்ற முடியாமல் போய்விடும்.

தமிழகத்தில் பல ஆயிரம் கோடி பணம் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. அதில் ஒருசில கோடி ரூபாய்களை மட்டுமே பிடித்திருக்கிறார்கள்.

ஒரு ஓட்டுக்கு ரூ.1,000, 2,000 என்று அதிமுகவும், திமுக வும் வழங்குகின்றன. எனவே ஊழல் பணமா, ஜனநாயகமா என்று நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். கருத்துக் கணிப்பு களை பொய்யாக்கி தேமுதிக- மக்கள் நலக் கூட்டணி- தமாகா அணி 150 இடங்களை கைப் பற்றும். இவ்வாறு வைகோ பேசினார்.

SCROLL FOR NEXT