சட்டப்பேரவைத் தேர்தலில் அனைவரும் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்று தமிழிசை சவுந்தராஜன் கருத்து.
தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி தவிர 232 தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அத்தொகுதியில் வாக்களித்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில், "அனைவரும் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். இது நமக்கு வெற்றியை தரும் ஒரு பெரிய வாய்ப்பு.
அந்த வாய்ப்பை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை வாக்களிக்க வேண்டும். தேர்தல் ஆணையம் சொல்லியிருக்கும் 100 சதவீத வாக்களிப்பு எல்லா தொகுதிகளிலும் இருக்க வேண்டும்" என்று தெரிவித்தார் தமிழிசை சவுந்தராஜன்.