தமிழகம்

குடியரசுத் தலைவர் தேர்தல்: வேட்புமனு தாக்கலில் ஓபிஎஸ், இபிஎஸ் கலந்துகொள்ள பாஜக அழைப்பு

செய்திப்பிரிவு

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் உடன் பாஜக தலைவர்கள் நேரில் சந்தித்து குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர்.

புதிய குடியரசு தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் 18-ம் தேதி நடைபெறுகிறது. இதில் பாஜக கூட்டணயின் வேட்பாளராக திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். இவர் நாளை நாடாளுமன்ற மாநிலங்களவைச் செயலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார்.

இந்நிலையில், இந்த நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்லம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை தனித்தனியாக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.

SCROLL FOR NEXT