தமிழகம்

பள்ளி பாடப் புத்தகங்கள் விற்பனை தொடக்கம்

செய்திப்பிரிவு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பாடப் புத்த கங்கள் தமிழக அரசு மூலமாக இலவசமாக வழங்கப்படுகின்றன. தனியார் சுயநிதி பள்ளி மாண வர்களுக்கு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட விற்பனை மையங்கள் மூல மாகவும் பாடநூல் கழக விற்பனை கவுன்டர்கள் மூலமாக வும் புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. தனியார் பள்ளி நிர்வாகத்தினர் தங்களுக் குத் தேவைப்படும் புத்தகங்க ளுக்கு பாடநூல் கழகத்தில் ஆர்டர் கொடுத்து மொத்த மாக புத்தகங்களை பெற்றுக் கொள்ளலாம்.

2016-17ம் கல்வி ஆண்டுக்கான பாடப் புத்தகங்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு வரும் நிலையில், தனியார் பள்ளிகளுக்கான பாடப் புத்தகங்கள் சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள பாடநூல் கழக விற்பனை கவுன்டரில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உள்ள (பிளஸ் 1 தவிர) அனைத்து வகுப்புகளுக்குமான புத்தகங்களை இங்கு வாங்கலாம்.

நேற்று மதியம் ஏராளமான பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கான பாடப் புத்தகங்களை நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச் சென்றனர். பிளஸ் 1 பாடப்புத்தகங்கள் இன்னும் 10 நாட்களில் விற்பனை செய்யப்படும் என்று தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் செயலாளர் செ.கார்மேகம் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT