தமிழகம்

இலங்கைக்கு 2-வது கட்டமாக 15,000 மெட்ரிக் டன் அத்தியாவசியப் பொருட்களை அனுப்பியது தமிழகம்

செய்திப்பிரிவு

சென்னை: இலங்கைக்கு 2-வது கட்டமாக ரூ.67.70 கோடி மதிப்பில் 15,000 மெட்ரிக் டன் அத்தியாவசியப் பொருட்களை இன்று இன்று தமிழக அரசு அனுப்பிவைத்தது.

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு தமிழக மக்களின் சார்பில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதன்படி முதற்கட்டமாக கடந்த மே 18-ம் தேதி ரூ.30 கோடி மதிப்பிலான 9045 மெட்ரிக் டன் அரிசி, ரூ.1.5 கோடி மதிப்பிலான 50 மெட்ரிக் டன் ஆவின் பால் பவுடர் மற்றும் ரூ.1.44 கோடி மதிப்பிலான 8 டன் அத்தியாவசிய மருந்துப்பொருட்கள் ஆகியவைகள் அடங்கிய தொகுப்பு இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக இன்று 2-வது கட்டமாக தூத்துக்குடி துறைமுகத்தில் சிடிசி சன் என்ற சரக்கு கப்பலின் மூலமாக ரூ.48.30 மதிப்பிலான 14,712 டன் அரிசி, ரூ.7.50 கோடி மதிப்பிலான 250 டன் ஆவின் பால் பவுடர் மற்றும் ரூ. 11.90 கோடி மதிப்பிலான உயிர்காக்கும் மருந்துப் பொருட்கள் என மொத்தம் ரூ. 67.70 கோடி மதிப்பிலான 15,000 மெட்ரிக் டன் அத்தியாவசியப் பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்தக் கப்பலை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி. கே.எஸ்.மஸ்தான், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அமைச்சர் ஆர்.சக்ரபாணி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ. கீதாஜீவன், மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கொடியசைத்து அனுப்பி வைத்தனர்.

SCROLL FOR NEXT