தமிழகம்

பண விநியோகத்தை கட்டுப்படுத்தும் கடைசி ஆயுதம் மக்கள்தான்: சீமான் கருத்து

செய்திப்பிரிவு

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கி ணைப்பாளர் சீமான், கடலூரில் நேற்று நிருபர்களிடம் கூறி யதாவது:

தலைவர்கள் போராடி பெற்றுத் தந்த ஜனநாயகம் தற்போது பண நாயகமாக மாறி வருகிறது. ஆண்ட, ஆளும் கட்சிகள் மக்களின் வறுமையைப் பயன் படுத்தி அவர்களுக்கு பணம் கொடுத்து வாக்குகளைப் பெற முயற்சிக்கின்றன. இதனைத் தடுக்க வேண்டிய தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் உள்ளது.

எனவே, பண விநியோகத்தை கட்டுப்படுத்தும் கடைசி ஆயுதமாக மக்கள்தான் உள்ளனர். பணம் கொடுத்து பதவிக்கு வருபவர்களிடம் எப் படி நேர்மையான அரசாங்கத்தை எதிர் பார்க்க முடியும். பணம் இருப்பவர் களால்தான் அரசாள முடியும் என்ற நிலை உருவா காமல் தடுக்க வேண்டிய வர லாற்றுக் கடமை இளைஞர்களிடம் உள்ளது. மக்களிடம் அரசியல் மாற்றம் வேண்டும் என்ற மன நிலை உள்ளது. மாற்றத்தை விரும்புவோர், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரிக்க வேண் டும். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT