முதல்வர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள் பதவியேற்கும் விழா வுக்கான ஏற்பாடுகள் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடந்து வருகிறது. முதல்முறையாக தமிழகம் முழு வதும் இந்த விழாவை நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
தமிழக முதல்வராக ஜெயலலிதா நாளை பதவியேற்கிறார். அவருடன் 28 அமைச்சர்களும் பதவியேற் கின்றனர். புதிய அமைச்சரவை பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடு கள், சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் தீவிரமாக நடந்து வருகின்றன.
விழா மேடை, மண்டபத்துக்கும் உள்ளும் வெளியிலும் அலங்கார பணிகள், அதிக வெளிச்சம் தரும் விளக்குகள் பொருத்துதல், முக்கிய விஐபிகள் அமர்வதற்கான சிறப்பு ஏற்பாடுகள் நடந்து வரு கின்றன. அரங்கின் வெளியே பதவியேற்பு நிகழ்ச்சியை பொதுமக்கள் பார்க்கும் வகையில் பிரமாண் டமான டிஜிட்டல் திரைகள் அமைக் கப்படுகின்றன. மாநகராட்சி சார்பில் குடிநீர், கழிவறை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.
விழா அரங்கை காவல் இணை ஆணையர்கள் மனோகரன், ஜோஷி நிர்மல் குமார் ஆகியோர் நேற்று காலை பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர். முதல்வர் ஜெயலலிதா மற்றும் விஐபிக்கள் மெரினா கடற்கரை சாலையில் உள்ள பிரதான வாசல் வழியாக அரங்கத்துக்குள் வருவதற் கும், அரசியல் கட்சிகளின் தலை வர்கள், தொண்டர்கள் வாலாஜா சாலையில் உள்ள வாசல் வழி யாக வருவதற்கும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. விஐபிக்களின் வாகனங் களை தவிர மற்ற அனைவரின் வாகனங்களும் மெரினா கடற்கரை உட்புற சாலையில் நிறுத்தப்படும்.
நேரடி ஒளிபரப்பு
இதற்கிடையே, புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா, முதல் முறையாக தமிழகம் முழுவதும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழக முதல்வராக ஜெய லலிதா பதவியேற்கும் நிகழ்ச்சி, சென்னை பல்கலைக்கழக நூற் றாண்டு விழா அரங்கில் 23-ம் தேதி நடக்கிறது. இந்நிகழ்ச்சியை பொதுமக்கள் பார்க்கும் வகையில் முதல்முறையாக தமிழகம் முழுவதும் நேரடி ஒளிபரப்பு செய் யப்பட உள்ளது. செய்தி, மக்கள் தொடர்புத் துறை கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் எல்இடி வீடியோ வேன் மூலம் தஞ்சாவூர், கரூர் மாவட்டங்கள் தவிர அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நேரடி யாக ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.