தமிழகம்

மது அருந்திவிட்டு மகளை துன்புறுத்தியதால் ரவுடி மருமகனை கொன்ற மாமியார் சரண்

செய்திப்பிரிவு

தினமும் மது அருந்திவிட்டு மகளை துன்புறுத்தி வந்த மருகமனை தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த மாமியார் போலிஸில் சரணைடந்தார். கொலையானவர் காஞ்சிபுரத்தில் பிரபல ரவுடி என்பதும் அவர் மீது பல்வேறு கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளதும் விசார ணையில் தெரியவந்துள்ளது.

சின்ன காஞ்சிபுரம் பகுதியில் திருநீலகண்டர் தெருவைச் சேர்ந்த பிரபல ரவுடி விநாயகம். இவர் மீது, விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் பல்வேறு கொலை, கொலை முயற்சி மற்றும் கொள்ளை என 24 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதே பகுதியைச் சேர்ந்தவர் கீதா. இவரது மகளைத்தான் விநாயகம் திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில், கொலை வழக்கு தொடர்பாக சிறையில் இருந்த விநாயகம் கடந்த மாதம் ஜாமீனில் வெளியே வந்தார். அவர் தினமும் மது அருந்திவிட்டு மனைவியை அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட அவர் தனது தாய் கீதாவிடம் முறையிட்டு அழுததாக கூறப்படுகிறது.

வழக்கம்போல் நேற்று முன் தினம் இரவு விநாயகம் மது அருந்திவிட்டு மனைவியிடம் தகராறு செய்து அடித்து துன்புறுத் தியதாக தெரிகிறது. அப்போது, அங்கு வந்த மாமியார் கீதா, மக ளிடம் தகராறு செய்ததைப் பார்த்து ஆவேசம் அடைந்தார். பின்னர் அங்கிருந்த கல்லைத் தூக்கி மருமகன் விநாயகம் தலையில் போட்டார். இதில் அவர் இறந்தார்.

பின்னர், விஷ்ணு காஞ்சி காவல் நிலையம் சென்ற கீதா, மருமகனை கொலை செய்தது குறித்து விவரம் தெரிவித்து போலிஸில் சரணடைந்தார். அவரை கைது செய்த போலீஸார், இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT